பிரிட்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின் போது பிரிட்டன் விளையாட்டு வீரர்கள் அணியவுள்ள ஆடைகள் இலங்கையில் அடிப்படை தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பிரிட்டன் அணிக்கான அதிகாரபூர்வ ஆடைகளை பிரிட்டனிலுள்ள நெக்ஸ்ட் ஆடை விற்பனை நிறுவனம் வெளியிட்டு சில நாட்களுக்குள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் லண்டனிலிருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் நாளிதழில் வெளியாகியுள்ளன.
ஆடை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நெக்ஸ்ட் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள தொழிற்சாலையில் அடிமட்டச் சம்பளத்திற்கு, அளவுக்கதிகமான மேலதிக நேரத்திற்கு, கணக்குவழக்கு இல்லாத அளவுக்கு தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
.
.