5/06/2012

| |

படுவான் கரை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக பல திட்டங்கள் முன்னெடுப்பு -படங்கள் இணைப்பு

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 40ம் கிராம மக்கள் நீண்டகாலமாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர் நோக்கி வந்தனர்.
கிழக்கு மாகாணசபை JICA திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளுராட்சித் திணைக்களங்களின் அனுசரணையுடன் மக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட இருக்கின்றன.  இத்திட்டமானது 45 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுகின்றன
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ். நமசிவாயம், பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் , போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ். சிறிதரன் மற்றும் உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட குளுவினமடு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டம் வெள்ளிக்கிழமை (04.05.2012) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
JICA திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்கள், உள்ளுராட்சி திணைக்களங்களின் அனுசரணையோடு மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப் படத்தப்படும் இத்திட்டமானது 45 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ். நமசிவாயம், பிரதேச செயலாளர் திருமதி எஸ் வில்வரெத்தினம், மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் ரீ. பேரின்பராஜா மற்றும் உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.







மண்முனை மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட தாந்தாமலை கிராம மக்கள் நீண்ட காலமாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர் நோக்கி வந்தனர். இதனைக்கருத்திற் கொண்ட கிழக்கு மாகாணசபை JICA திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
இதன் ஆரம்பக்கட்ட நிகழ்வு 04.05.2012 அன்று தாந்தாமலை கிராமத்தில் இடம்பெற்றது. தாந்தாமலைக் கிராமத்தில் 859 பயனாளிகள் பயன்பெறும் நோக்குடன் 32 மில்லியன் செலவில் இந் நீர்விநியோகத்திட்டமானது சிறப்பான முறையில் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ். நமசிவாயம், பிரதேச செயலாளர் திருமதி எஸ் வில்வரெத்தினம், மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் ரீ. பேரின்பராஜா மற்றும் உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வெள்ளிக்கிழமை (04.05.2012) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஆலயத்தின் பரிபாலனசபையினர் மற்றும் பொது மக்களோடு கலந்துரையாடி ஆலயத்தின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு ஆலயத்தின் தீர்த்தக் கங்கையினை பார்வையிட்டதுடன் தீர்த்தக் கங்கையினில் எதிர்காலத்தில் எவ்வாறான நிர்மானப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களையும் ஆலய பரிபாலன சபையினரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இத் தீர்த்தக் கங்கையினை கிழக்கு முதல்வர் அவர்கள் புனரமைப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதது .