இன்று 02.04.2012 பிற்பகல் 5.30 மணியளவில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். ஒரு சிறியபிள்ளை மற்றும் பெண்ணொருவர் பலத்த காயங்களுக்கள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சொந்தமான வாகனம் வந்தாறுமூலை அம்பலத்தடியில் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதில் மோதுண்டு வந்தாறுமூலை அம்பலத்தடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜீவா என்கின்ற குடும்ப பெண் ஸ்தலத்திலே பலியானார். இருவர் விபத்துக்குள்ளாகி மட்டு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஒருவர் வந்தாறுமூலை கிழக்கைக் சேர்ந்த சுமதி மற்றவர் ஒரு சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த விபத்தின் காரணமாக வந்தாறுமூலை பிரதேசத்தில் பதட்;டநிலை ஏற்பட்டு இராணுவத்தினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பொது மக்களுக்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டு 2 பொது மக்கள் சிறுகாயங்களுக்கள்ளாகி மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுடள்ளார்கள். பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் பொலிஸார் கொண்டுவந்துள்ளார்கள்.. தற்போது பிரேத பரிசோதனைக்காக பூதவுடல் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.