5/24/2012

| |

முதியோருக்கான கொடுப்பனவு300 ல்இருந்து ஆக 1000 அதிகரிப்பு


இலங்கையில் வாழும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 11 வீதமாக காணப்படுகின்றது. கல்வி யறிவும், சுகாதார வசதிகளும் அதிகரித்த மையே நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சமூக சேவைகள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சனத்தொகையில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 193 பேர் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர். எமது நாட்டை பொறுத்த மட்டில் ஆண்களின் ஆயுட்காலம் 73 வருடங்களாகவும் பெண்களின் ஆயுட்காலம் 76 வருடங்களாகவும் காணப்படுகின்றன.
இலங்கையின் கல்வி அறிவு 96 வீதமா கவும், சுகாதார வசதிகள் 98 வீதமாகவும் அதிகரித்ததன் காரணமாகவே முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தொற்று நோய்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
எனவே, தான் நாம் முதியோர் பராமரிப்பு, முதியோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதுவரை முதியோருக்கு அரசினால் உதவித் தொகையாக 300 ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்களின் நலனை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜும் மாதம் முதல் 1000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.
தேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல பெயர்களில் முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 248 பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலத்தில் சகல முதியோர் இல்லங்களும் கட்டாயம் பதியப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்