முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எல். ரீ. ரீ. ஈயின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்ய ப்பட்ட 21வது ஆண்டு நிறைவு (21) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
தானு என்ற இந்த தற்கொலை குண்டுதாரியின் இயற்பெயர் தேன்மொழி ராஜரட்ணம் ஆகும். ராஜீவ் காந்தி 1984ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பிரதமரானார். இறக்கும்போது இவருக்கு 46 வயதாகும்.
ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியாவின் நேரு குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த குண்டு வெடிப்பின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞரின் கமரா சேதமடையாத நிலையில் இருந்ததனால் தான் இந்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த கமராவிலுள்ள புகைப்படத்தை பார்த்து புலிகள் இயக்கமே ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்பதை ஊர்ஜிதம் செய்தது.