அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2012 மட்டக்களப்பு மாவட்ட மட்ட நிகழ்வுகள் இன்று (09.05.2012) மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி கலை, கலாசார விளையாட்டுத்துறை உதவிச் செயலாளர் ஜனாப் எம்.ரீ.ஏ.நிசாம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் , மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.