5/31/2012

| |

சப்பிரகமுவ மாகாண சபை கலைக்கப்படும்

சப்பிரகமுவ மாகாண சபை இன்னும் ஒரு கூட்டத் தொடரின் பின்னர் கலைக்கப்படும் என மாகாண சபை விவசாய அமைச்சர் ஸ்ரீலால் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற சபை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
44 உறுப்பினர்களை கொண்ட கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய சப்பிரகமுவை மாகாணசபை இன்னும் இரு வாரங்களின் பின்னர் சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
»»  (மேலும்)

| |

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?

International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
 P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph:             00 61 3 9308 1484      
                            E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:
 இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
murugapoobathyஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால்  முதலில் தமிழ்நாட்டிலிருந்தே  எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில  சிற்றிதழ் ஆசிரியர்களுமாக  சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
இதேவிதமாகவே தற்போதும்  நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.
தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.
கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது.
தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான். இலங்கையில் 1958, 1977, 1981, 1983 ஆகிய காலப்பகுதிகளில் இனவாத வன்செயல்கள் நடந்தன. அப்பொழுது தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள வெள்ளவத்தை உட்பட அதன் சுற்றுப்பிரதேசங்களிலெல்லாம் வன்செயல்கள் நடந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டார்கள். அகதிகளாகி இடம்பெயர்ந்தார்கள்.
எனினும் கொழும்பு தமிழ்ச்சங்கம் இந்த வன்முறைகளினால் அழிந்துவிடவில்லை. அதன் பணிகள் தடைப்படவில்லை. தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கள எழுத்தாளர்களும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ஒரு தாய்மக்கள் போன்று உறவாடி கருத்துப்பரிமாற்றம் செய்கிறார்கள்.
அரசாங்கங்கள் வரலாம் போகலாம். ஆட்சித்தலைவர்கள் மாறலாம். இனவாத வன்செயல்களும் கடந்துசெல்லும் மேகங்கள் போன்று வந்துபோகலாம். ஆனால் இலங்கையில் தமிழும் தமிழர்களும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.அதனால்தான் 80 ஆண்டுகளைக்கடந்தும் வீரகேசரி கொழும்பிலிருந்து இன்னமும் தங்கு தடையின்றி வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாடசாலைகள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயங்குகின்றன.
இந்த யதார்த்த உண்மைகளை குறிப்பிட்ட ஐம்பது பேர் கருத்துச்சொல்லும் தமிழக படைப்பாளிகள் இயக்கமும் மறுமலர்ச்சி தி.முக. தலைவரும் ஏன் ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்னர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளையும் சந்தித்து திருமணம் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்கள்.
யாழ்;ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்திலும் விரதம் இருந்து வந்து கலந்து பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே யுத்தம் நிகழ்ந்த முல்லைத்தீவுப்பிரதேசத்தில் வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கலுக்கும் நயினை நாகபூஷணி அம்பாள் திருவிழாவுக்கும் வருகைதருகிறார்கள்.
கொழும்பில் ஆடிவேல் விழாவையும் தரிசிக்கிறார்கள். இந்நிகழ்வுகளுக்கு தமிழக நாதஸ்வர வித்துவான்களும் கொழும்பு கம்பன் விழாவுக்கு தமிழக அறிஞர்களும் வந்து சிறப்பிக்கிறார்கள். அத்துடன் தமிழகத்திலிருந்து தினமும் பலர் வந்து திரும்பிக்கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களில் சாதாரண மக்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், சோதிடர்கள், சாமியார்கள், துறவிகள், வியாபாரிகள் உட்பட பலர் அடங்குவர். ஆனால் அதற்கெல்லாம் எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் புறப்பட்டால் மாத்திரம் எதிர்ப்புத்தெரிவிப்பது ஏன்?
ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் இடையில் நட்பும் உறவும் ஆரோக்கியமாக வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறார்களா? அல்லது இலங்கையில் தமிழ் இலக்கியம் போருக்குப்பின்னர் புத்துயிர் பெற்றுவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்களா?
 நீண்ட காலமாக நீடித்த இந்த கலை, இலக்கிய உறவுப்பாலத்;தை தகர்த்nறிவதில்; அவர்களுக்கு அப்படியென்ன வக்கிரமான திருப்தி.
தமிழக படைப்பாளிகள் இயக்கத்தின் அறிக்கையையும் வைகோவின் அறிக்கையையும் பார்த்த பின்பு உடனடியாகவே கொழும்பில் பாரதி விழாவும் இலக்கிய மாநாடும் நடத்தும் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. கதிர்காமநாதனுடனும் இந்நிகழ்வுகளின் இலக்கிய இணைப்புச்செயலாளர் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுடனும் தொடர்புகொண்டேன்.
ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகவும் மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய ஞானசேகரன் மிகவும் நிதானமாக, “சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்று கருத்துச்சொல்கிறார்கள். எமது சர்வதேச மாநாட்டிற்கும் இப்படித்தானே அவதூறு கற்பித்தார்கள். எனினும் அவர்களது பொய்ப்பிரசாரத்தை முறியடித்து திட்டமிட்டவாறு குறிப்பிட்ட மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று தமிழ்ச்சங்கம் தற்போது நடத்தவுள்ள மாநாடும் திட்டமிட்டவாறு நடைபெறும்” என்றார்.
சங்கத்தலைவர் கதிர்காமநாதனும் மிக நிதானமாகவே பதில் சொன்னார். வைகோ,  சங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும்.  சங்கம் அரசியல் கலப்பில்லாதது. அரசாங்கங்களின் ஆதரவுடன் சங்கம் என்றைக்கும் இயங்கியதும் இல்லை என்றும் இதுதொடர்பாக மாநாட்டு அமைப்புக்குழு கூடிப்பேசும் என்றும் தெரிவித்தார்.
“வைகோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சங்கத்தின் வரலாற்றை சுருக்கமாகவும் பாரதிவிழாவினதும் இலக்கிய மாநாட்டினதும் நோக்கத்தை தெளிவுபடுத்துமாறும் அவருக்குச்சொன்னேன்.
பின்னர் தமிழகத்தில் சிற்றிதழ் சங்கத்தலைவர் வதிலை பிரபாவுடன் தொடர்புகொண்டு வைகோவின் தொலைபேசி இலக்கம்பெற்றேன். அவரது இல்;லத்திலிருந்து, “அவர் திருச்சிக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக” தகவல் கிடைத்தது. வைகோவின் கட்சி அலுவலகத்தில் தொடர்புகொண்டேன். பின்னர் அவரது பொதுமக்கள் தொடர்பு ஊழியரை தொடர்புகொண்டேன் எனினும் இந்த ஆக்கம் எழுதும் வரையில் வைகோவுடன் பேச முடியவில்லை. தொடர்ந்து முயற்சிப்பேன்.
 ஏற்கனவே நாம் 2011 இல் மாநாடு நடத்தியபோது தமிழகத்திலிருந்து எதிர்வினைகள் தொடங்கியதும் கோவை ஞானி, பொன்னீலன், தி.க.சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ராமகிருஷ்ணன்  உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மவரின் நிலைப்பாட்டை விளக்கநேர்ந்தது. அத்துடன் தமிழக இதழ்கள் சிலவற்றிலும் நேர்காணல்கள், மற்றும் கட்டுரைகள் வாயிலாக விளக்கநேர்ந்தது.
 செயப்பிரகாசம் உட்பட பல தமிழக படைப்பாளிகளுக்கு நாம் ஏற்கனவே அளித்துள்ள விளக்கமும் 2011 இல் இலங்கை அரசினதோ அரசியல்வாதிகளினதோ ஆதரவு எதுவுமின்றி படைப்பாளிகள், கலைஞர்கள், தமிழ் அபிமானிகளின் நிதிப்பங்களிப்புடன்தான் மாநாடு வெற்றிகரமாக தரமாக நடந்து முடிந்தது என்பதும் அது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதும் நன்கு தெரியும்.
  அதனால் மீண்டும் மீண்டும் இப்படியே நாம் விளக்கிக்கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இலங்கையர்களினால் நடத்தப்படும் எந்தவொரு தமிழ் மாநாட்டிற்கும் அவர்கள் சிங்கள அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானிருப்பார்கள். தமிழகத்திலிருந்து வரவிரும்புபவர்களை செல்ல விடாமல் தடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
 அதனால் இலங்கை தமிழ் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் மற்றும் தமிழ் மாநாடுகளை ஒழுங்குசெய்யும் தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளும், தமிழகத்தின் எதிர்ப்புக்குரலை அலட்சியம் செய்துவிட்டு பணிகளை தொடரவேண்டியதுதான் அவர்களுக்கு வழங்கும் அமைதியான பதிலாக இருக்கமுடியும்.
 ராஜபக்ஷாவின் அரசாங்கம் பதவியிலிருக்கும் வரையில் இலங்கைத்தமிழன் தமிழின் பெயரால் விழாவோ, மாநாடோ ஒழுங்கு செய்யாமல் வரண்டுபோய்விடவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்போ தெரியவில்லை.
இதற்கு காலம் பதில் சொல்லுமா? அல்லது வழக்கம்போன்று காலம் இதனையெல்லாம் மறந்துவிடுமா? 
முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
அவுஸ்திரேலியா.
»»  (மேலும்)

| |

கூட்டமைப்புக்குள் குடும்பி சண்டை

  


தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தற்போது வெளியிடும் கருத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கடசிதான் தமிழ் மக்களுக்கான கட்சி என மட்டக்களப்பில் நடந்த தேசிய மாநட்டிலே குறிப்பிட்டிருந்தார் சம்பந்தன். 
இதனை நாங்கள் ஒருபோதும் எற்க மாட்டோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களுக்கான கட்சிதான். இவ்வாறு இருக்கும் போது திரு சம்பந்தன் அவர்கள் தனது கட்சிதான் தாய் கட்சி எனறு குறிப்பிடுவது ஏற்க முடியாத ஒன்றாகும் என பிபிசிக்கு தெரிவித்தார்சுரேஸ் பிரேமசந்திரன் .
அதனை இரா சம்பந்தன மறுத்திருக்கின்றார். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பல கட்சிகள் இருந்தாலும் உண்மையில் தமிழ் மக்களுக்கென்று இதய சுத்தியோடு செயற்படும் கட்சி என்றால் அது தமிழரசுக் கடசிதான் என்கின்றார். இப்படி ஆளுக்காள் விவாதித்து கொண்டே செல்கின்றார்கள். தொடர்ந்து இந்த நிலமை தொடருமானால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  

»»  (மேலும்)

5/30/2012

| |

மட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 46 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ம் ஆண்டைய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 346821 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அஸங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தொகுதியில் 162175 வாக்காளர்களும் கல்குடா தொகுதியில் 100615 வாக்காளர்களும் பட்டிருப்பு தொகுதியில் 84031 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மட்டு மாநகர மேயர் தாயாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர்

 மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரனின் தாயாரான திருமதி பிறேமாதேவி ராஜன் சத்தியமூர்த்தி நேற்று(28.05.2012) காலமானார். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு பஸ் டிப்போவுக்கு முன்னாலுள்ள அவரது இல்லத்தில் மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அஞ்சலியை செலுத்தினார். இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் இணைந்து கொண்டார்.
»»  (மேலும்)

5/29/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் மா.ச.உ. பூ.பிரசாந்தன்

தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற வேளையில் அதனைக் குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்த கருத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் ஏற்படுவதற்கும், பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கும் வழிசமைத்துக்கொடுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் அணிதிரண்டு நிற்கும் இவ் வேளையில் கட்சியின் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அண்மைக்காலமாக கட்சியின் உறுப்பினர்களையும், கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனையும் தூற்றி வருவது அனைவரும் அறிந்த விடயம். இவ் வேளையில் தனது சொந்த பிரச்சினையில், மாநாட்டைக் குழப்ப தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளது கட்சியை அவமதிப்பதுடன், இது ஓர் ஆதாரமற்ற கருத்துமாகும்.
பொறுப்பு மிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தெரிவிக்கின்ற கருத்துக்களும் ஆதாரமுள்ளதாகவும், யதார்த்தபூர்வமாகவும் இருக்க வேண்டும். தான் அரசியல் நடத்துவதற்காக பொறுப்பு மிக்க எமது அரசியல் கட்சிக்கு அவதூறு விளைவிப்பது நாகரீகமற்ற செயலாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டுள்ள இக் கருத்தினை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் அவர்களுக்குள் நடைபெற்ற குழப்பங்களுக்கும், எமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இதனூடாக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.
»»  (மேலும்)

| |

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?

பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள்
தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், வடயங்களையும் நாம் ஆராய வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது எனும் செய்தி வெளியாகிய நாள்முதல் இம் மாநாட்டுக்கு மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்பு இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இன்று சில இணையத்தளங்கள் பிள்ளையான் குழுவினர் மாநாட்டை குழப்ப சதி செய்தனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. இது முற்று முழுதான உண்மையல்ல என்பதனை மட்டக்களப்பு மக்கள் அறிவர்.
உண்மையில் இன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே முதலமைச்சர் பிள்ளையான் மீது நம்பிக்கையும் ஒரு பற்றும் இருக்கின்றது. காரணம் அவரது அயராத உழைப்பும் கிழக்கின் துரித அபிவிருத்தியுமாகும். இன்று எந்த ஒரு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றாலும் முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைத்து விடுவார்கள். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கின்றது.
மறு புறத்திலே கிழக்கில் ஒரு தனித்துவ கட்சி இருக்கின்றபோதுதான் கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனையும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய அதிருத்தியில் மட்டக்களப்பு மக்கள் இருந்தனர். பல அமைப்புக்கள் இம் மாநாட்டினை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்ததுடன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கறுப்பு கொடி போராட்டத்தினையும் நடாத்தி இருந்தனர்.
தமிழரசுக் கட்சியினர் தமது மாநாட்டை தேவநாயகம் மண்டபத்திலே நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மட்டக்களப்பு மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை படிப்படியாக உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சியினர். மாற்று வழிகளிலே தமக்கு ஆதரவு தேடவும் முன் வந்திருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் மாநாடு இடம்பெற இருந்த தேவநாயகம் மண்டபம் தீப்பிடித்து மேடைப்பகுதி எரிந்தது. இது மாநாட்டைக் குழப்ப சிலர் சதி செய்வதாக கூட்டமைப்பினர் கூறினர். சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம். பெரிதுபடுத்தி அறிக்கைகளைவிடும் கூட்டமைப்பினர் இத் தீப்பிடித்த விடயத்தினை சாதாரண விடயமாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிலர் சதி செய்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர்.
மட்டக்களப்பில் தமக்கு ஆதரவு இல்லை என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர். ஆதரவு தேடுவதற்கு தாம் மேற்கொண்ட யுக்தியே மண்டபத்தின் மேடைப்பகுதி எரிப்பு. இது கூட்டமைப்பினர் திட்டமிட்டு செய்த செயலாகும்.
உடனடியாக மாநாடு இடம்பெறும் இடம் மட்டக்களப்பு ஊறணி அமேரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 27ம் திகதி மாநாடு இடம்பெற்றது. இம் மாநாடு வெற்றியா? தோல்வியா? பாரிய வெற்றியாக கூட்டமைப்பினர் மார் தட்டிக் கொள்கின்றனர்.
உண்மையில் வெற்றியா? அமேரிக்க மிஷன் மண்டபத்தில் 300ர-400 பேர்தான் இருக்க முடியும். இம் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும், திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும், அம்பாறையிலிருந்து ஒரு பஸ்ஸிலும் கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் , திருகோணமலை, அம்பாறை மாவட்ட்ளிலிருந்து வருகை தந்தவர்கள் ஒரு பஸ்ஸில் 50 பேர் வீதம் பார்த்தால் 250 பேர். தனிப்பட்ட வாகன்களிலும் பலர் மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். அதனைவிட கொழும்பு மற்றும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அதனைவிட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் 50 மேற்பட்டவர்கள்.
மொத்தமாக மண்டபத்தில் 300-400 பேர் மட்டுமே இருக்க முடியும் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தாலே மண்டபம் நிநை்துவிடும். ஆனாலும் மாநாட்டை குழப்ப வந்ததாக கூட்டமைப்பினர் கூறும் மண்டபத்திற்குள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் 50 க்கும் குறைவானவர்களே எனது களுதாவளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை களுதாவளைக் கிராமத்திலிருந்து மாநாட்டுக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டுமே. கனகசபை மற்றும் இன்னொருவர். இந்த மாநாட்டின் உப தலைவரான கனகசபை தனது சொந்தக்காரர்களைக்கூட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு களுதாவளையில் இருந்து சென்றவர்கள் 374 பேர். இவர்களை யாரும் வற்புறுத்தி அழைக்கவில்லை தாமாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள்.
கறுப்புக் கொடிகள் கட்டியது துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டது பிள்ளையான் குழுவினர் என்று யோகேஸ்வரன் சொல்கின்றார். அப்படியானால் மட்டக்களப்பு மக்கள் ஏன் மாநாட்டுக்கு வரவில்லை. மாநாட்டை புறக்கணித்தனர். பிள்ளையான் சொல்வதனை கேட்கின்றனர். பிள்ளையானின் பக்கம் மட்டக்களப்பு மக்கள் நிக்கின்றார்கள் அல்லவா?
இந்த மாநாடு தோல்லியா வெற்றியா என்பதனை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்ததனை வைத்தே தீர்மானிக்கலாம். இம் மாநாடு மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்டுவிட்டனர் என்பதனை பறை சாற்றுகின்றன.
இறுதியாக யோகேஸ்வரனிடம் ஒரு கேள்வி உங்கள் ஊரிலிருந்து எத்தனைபேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர் என்று சொல்ல முடியுமா?
»»  (மேலும்)

| |

முதலமைச்சரின் வருகையால் ஒளிபெறும்.எல்லைகிரமங்கள்

தம்பானம்வெளி 


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பானம்வெளி கிராமமானது யுத்தம் மற்றும் வன்செயல் காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளான கிராமமாகும். இக் கிராம மக்கள் மின்சாரம் இன்றி பலநெடுங்கலாமாக சிரமப்பட்டு வந்தார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடத்தில் தெரியப்படுத்தியதை அடுத்து உடனடியாக குறித்த கிராமத்திற்கான மின்சாரம் வழங்குவதற்கான எற்பாடுகளை அவர் செய்தார்.

இன்று(26.05.2012) கிராம மக்களின் எற்பாட்டில் இடம்பெற்ற மின்சாரம் வழங்குவதற்கான எற்பாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மின்சாரத்தினை வழங்கி வைத்தார். இன்றிலிருந்து தம்பானம் வெளி கிரமம் ஒளிமயமாக காட்சி தருகின்றது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர், மின்சார சபையின் பொறியிலாளர் தயாபரன் ,கிராம சேவைல உத்தியோகஸ்த்தர் சுதாகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள் 

வேப்பவெட்டவான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டவான் கிராமத்திற்க இன்று(26.05.2012) மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலைமைச்சுரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் இக் கிராமத்திற்கான மின்சாரம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. இந் நகிழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் கிராம சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் முதலமைச்சருடன் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஏற்றுள்ள திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இன்று(26.05.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேற்படி சந்திப்பானது முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்ந்து சிறப்பாக இடம்பெறுவதற்கு அனைவரினது ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில் அனைவரினது ஒத்துழைப்புடன் மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

»»  (மேலும்)

5/28/2012

| |

மட்டக்களப்பில் பிரபல வர்த்தகர் தனக்குத் தானே மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டி தற்கொலை

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் வடக்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில், 48 வயதான ப. அருணகிரி என்ற பிரபல வர்த்தகரே வீட்டிற்கு வெளியே தனக்குத் தானே மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவரை உறவினர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் இறப்பதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து பொலிசாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாநகர மேயரின் தாயார் காலமானார்

மட்டக்களப்பு மாநகர மேயரின் தாயார் பிறேமா தேவி ராஜன் சத்தியமூர்த்தி தனது 79ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் காலமானார்.
சுகயீனமுற்றிருந்த இவர் இன்று மரணமடைந்ததாக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.
இவர் மட்டக்களப்பு முன்னாள் வர்த்தக சங்கத்தலைவரும் மட்டக்களப்பு முக்கியஸ்தருமான ராஜன் சத்திய மூர்த்தியின் மனைவியாவார்.
இவரின் நல்லடக்கம் நாளை நடைபெறுமென மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீர்த்தா மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை படம் பிடிக்க சென்ற புதிய விடியல் ஊடகவியலாளர் மீது தாக்குதல் கமராவும் பறிப்பு - யோகேஸ்வரனின் அராஜகம் !மட்டக்களப்பில் வைத்து மட்டக்களப்பானை தாக்க யாழ் கூலிப்படை

தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாடு நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது செய்தி சேகரிக்க சென்ற புதிய விடியலின் செய்தியாளர் தாக்கப்பட்டதுடன் கமராவும் பறித்து யோகேஸ்வரனின் அராஜகம் அரங்கேறியுள்ளது மதகுருவாக இருந்து கொண்டு இவ்வாராண கீழ்த்தனமான செயலில் ஈடுபடுவது நீதியா மட்டக்களப்பில் வைத்து மட்டக்களப்பானை தாக்க யாழ் கூலிப்படையை பயன் படுத்தியது நியாயமா?
தாக்கப்பட்ட எமது செய்தியாளர் நிரோசன் தாக்கப்பட்டதை விடியல் நிருவாகம் கண்டிப்பதுடன் யோகேஸ்வரனின் அராஜக செயலை தட்டிக்கேட்க மானமுள்ள மட்டக்களப்பானாக உறுதி பூணுவோம்.
»»  (மேலும்)

5/27/2012

| |

தமிழரசுக் கட்சியின் 14 வது மாநாட்டில் தலைவர் சம்பந்தன் அவர்கள் உரையாற்ற விடாது மாநாட்டு மண்டபத்துக்குள் குழப்பம்


தமிழரசுக் கட்சியின் 14 வது மாநாட்டில் தலைவர் சம்பந்தன் அவர்கள் உரையாற்ற விடாது மாநாட்டு மண்டபத்துக்குள் குழப்பம்
தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் உரையாற்றும்போது சம்பந்தன் அவர்களை உரையாற்ற விடாது குழப்பம் ஏற்பட்டது.
மண்டபத்துக்குள் இருந்த பலர் சம்பந்தன் அவர்கள் உரையாற்றக் கூடாது என்று கூச்சலிட்டனர். இதனால் மண்டபத்துள் பெரும் குழப்பம் ஏற்பட்டது
»»  (மேலும்)

| |

தோல்வியில் முடிந்த தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு

tna_bus_attack01.jpgதமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் கட்சியின் தள்ளாடும் தலைவர் சம்பந்தன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயம் அறிந்த மட்டக்களப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினை அடுத்து மட்டக்களப்பு மக்களின் வருகை கிடைக்காது என்பதனை உணர்ந்த தமிழரசுக் கட்சி சூட்சுமமாக அமெரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாநாட்டினை மாற்றினர்.
வீடு, வீடாகச் சென்று மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தீவிர ஆதரவாளர்கள் கூட மாநாட்டினைப் பகிஷ்கரித்துள்ளனர். யாழ்ப்பானத்தில் இருந்து இரண்டு பஸ்களும், திருகோணமலையில் இருந்து இரண்டு பஸ்களும், அம்பாறையில் இருந்து ஒரு பஸ் அடங்கலாக உணவு பொட்டலங்கள் வழங்குவதாகவும், கௌரவிப்பதாகவும் கூறி அழைத்துவரப்பட்டவர்களை வைத்து, மட்டக்களப்பில் மாநாடு நடத்தியதாக பிரச்சாரம் செய்ய முற்பட்ட தமிழரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது.
இது பற்றி கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் மாநாடு இந்த வேளையில் நடத்த வேண்டாம் என தாங்கள் எடுத்துக்கூறிய போதும், ஏற்றுக்காள்ளாமல் யாழ்ப்பாணத்தவர்களை வைத்தாவது மாநாட்டை நடத்துவோம் என்ற மாவை சேனாதிராஜாவின் கூற்று பிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மக்களுக்காக தாங்கள் பல வேளைகளில் குரல் கொடுக்க முன்வந்த போதும், மக்கள் உணராமல் தமிழரசுக் கட்சியின் மாநாட்டினை புறக்கணித்தது தமக்கு வேதனையைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும் திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இம் மாநாட்டை புறக்கணிக்கும்படி பல அமைப்புக்கள் துண்டுப் பிரசுர்கள் போஸ்ரர்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்ததுடன் மட்டக்களப்பின் பல பகுதிகளில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

| |

தமிழ் தேசிய கூட்டடைமப்பின் தேசிய மாநாட்டிற்கு கூட்டடைமப்பு அதிருப்தியாளர்கள் கடும் எதிர்ப்பு



கறுப்பு கொடி, துண்டுபிரசுரம் மற்றும் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தினர்

 

மாநாடு மட்டக்களப்பில் 25.26.27 ஆகிய திகதிகளில் இடம்பெற்று வருகின்றது. வடக்கு தலைமைகள் இம் மாகாநாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாது மட்டக்களப்பான் தலைமை தாங்க வேண்டும் என்று பல்வேறு துண்டுபிரசுரங்கள் வெளியிடபடபட்டுள்ளன. அதே Nவைளை சிவாஜிலிங்கம் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துண்டுபிரசுரங்களும் வெளியாகின. இன்று(26.05.2012) மட்டக்களப்பின் நகர் பகுதி மற்றும் பறநகர் பகுதி முழுவதும் அத்தோடு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் முழுவதும் கறுப்பு கொடி மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
இவ்வளவு காலமும் இருந்து விட்டு தற்போது மட்டக்களப்பில் தேசிய மாநாடு நடாத்துவதன் நோக்கம் மட்டக்களப்பு மக்களுக்கு விளங்காதா என்ன?
கிழக்கு மாகாண சபை தேர்தல் வரப் போகுது தானே. அதில பிள்ளiயான்தான் முதலமைச்சராக வருவாராம.; அதனை இல்லாமல் செய்வதற்கான சதி திட்டம்தான் இது. ஏன் எண்டா தமிழர்களிண்ட வாக்க பிரிப்பதற்கான சூழ்ச்சி மாத்திரம் அல்ல மட்டக்ளகப்பானுக்கு அடிக்கின்ற சாவுமணிதான் இந்த தேசிய மாநாடு. யோசிங்க மக்களே! 







 




வடக்கு தலைமைகளைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் 25.26.27 ஆகிய திகதிகளில் இடம்பெற்று வருகின்றது. வடக்கு தலைமைகள் இம் மாகாநாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாது மட்டக்களப்பான் தலைமை தாங்க வேண்டும் என்று பல்வேறு துண்டுபிரசுரங்கள் வெளியிடபடபட்டுள்ளன. அதே Nவைளை சிவாஜிலிங்கம் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துண்டுபிரசுரங்களும் வெளியாகின. இன்று(26.05.2012) மட்டக்களப்பின் நகர் பகுதி மற்றும் பறநகர் பகுதி முழுவதும் அத்தோடு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் முழுவதும் கறுப்பு கொடி மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
இவ்வளவு காலமும் இருந்து விட்டு தற்போது மட்டக்களப்பில் தேசிய மாநாடு நடாத்துவதன் நோக்கம் மட்டக்களப்பு மக்களுக்கு விளங்காதா என்ன?
கிழக்கு மாகாண சபை தேர்தல் வரப் போகுது தானே. அதில பிள்ளiயான்தான் முதலமைச்சராக வருவாராம.; அதனை இல்லாமல் செய்வதற்கான சதி திட்டம்தான் இது. ஏன் எண்டா தமிழர்களிண்ட வாக்க பிரிப்பதற்கான சூழ்ச்சி மாத்திரம் அல்ல மட்டக்ளகப்பானுக்கு அடிக்கின்ற சாவுமணிதான் இந்த தேசிய மாநாடு. யோசிங்க மக்களே!
 
»»  (மேலும்)

5/26/2012

| |

முஸ்லிம் காங்கிரஸ் அலுவகத்தீக்கிரை சம்பவம் ஜனநாயக அரசியலின்கழுத்து நெரிப்பு – ரீ.எல்.ஜவ்பர்கான்


முஸ்லிம் சமுகத்தின் அரசியல் முகவரியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய காத்தான்குடி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று மாலை கட்சியின் தேசிய தலைவரினால் திறக்கப்படவிருந்த நிலையில் திட்டமிடப்பட்ட ரீதியில் தீவைத்து கொழுத்திய சம்பவமானது ஜனநாயக அரசியிலின் மற்றொரு கழுத்து நெரிப்புச்செயலாகும்.
இவ்வாறான அசிங்கத்தனங்களை அரங்கேற்றுபவர்களை மக்கள் அடையாளம் காணுதல் அவசியம் என்று  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸன் தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரதேச அமைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கவிச்சுடர்  ரீ.எல்.ஜவ்பர்கான் ஜே.பீ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
30 வருட கொடுமை நிறைந்த யுத்தம் ஓய்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் சமாதன தென்றல் வீசும் இத்தருணத்தில் தாம் விரும்பிய அரசியலைச் செய்யவிடாது தடுத்து சர்வதிகார திணிப்பு அரசியலை நடாத்த முற்படுவது ஜனநாயத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
இத்தயை நடவடிக்கைகள் தொடருமானால் அரசியல் சுதந்திரமும் ஜனநாயக செயற்பாடுகளும் கைகட்டி வாய்மூடி ரசிக்க வேண்டிய நிலையே ஏற்படும். தயவுசெய்து விரும்பியவர்கள் விரும்பிய அரசியிலில் ஈடுபடும் ஜனநாயகம் பெற்றுத்தந்த சுதந்திரத்திற்கு தீமூட்டாதீர்கள் என்ற சிந்தனையை இதன் மூலம் விண்ணப்பமாகச்செய்கின்றேன்.
யா அல்லாஹ் சகலருடைய  ஆத்மாக்களையும் தூய்மைப்படுத்துவாயாக என அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணசபையை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடன் முதல்வர் சந்திப்பு

கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த 22.05.2012 அன்று இடம் பெற்றது. கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு திருகோணமலைக்கு வருகைதந்த மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் இச்சபை அமர்வினை பார்வையிட்டதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். இச் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தனும் கலந்து கொண்டிருந்தார்.

»»  (மேலும்)

| |

இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத்திற்கான 3நாள் விஜயத்தினை மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இன்று (24.05.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து கரலந்தரையாடினார். மேற்படிசந்திப்பானது திருமலை வெல்கம்வே கோட்டலில் இடம்பெற்றது.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு நகரில் மானமுள்ள மக்கள்

மட்டக்களப்பு நகரில் நடைபெற இருக்கும் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாட்டை எதிர்த்து யாழ் தலைமைகளின் துரோகத்தனத்தை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்கள் உணர்வு பூர்வமான மட்டக்களப்பில் விநியோகத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணிகள் நடத்தும் மகாநாட்டிற்கு மட்டக்களப்பில் இடமளிப்பதா? என்றும் வட்டுக்கோட்டையில் தீரமானத்தை நிறைவேற்றி முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று அழிந்து போனவர்கள் மட்டக்களப்பில் வந்து எதை சாதிக்க போகிறார்கள் என்றும் அந்த துண்டு உரிமையுடன் பிரசுரத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்?
மட்டக்களப்பான் துரோகி சக்கிலியன் என்ற நீங்கள் எதற்காக மட்டக்களப்பு வருகிறீர்கள்? என்றும் சில துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

5/25/2012

| |

தமிழரசுக்கட்சியின் செயற்குழு, மற்றும் மத்திய குழுக்களின் கூட்டம்

.மட்டகளப்பு மாவட்டம் எங்கும் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு தமிழரசுகட்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது தமிழ் அரசு கட்சியினரின் மாநாட்டு அழைப்பினை மக்கள் கண்டுகொள்ளவில்லை இதன் காரணமா க கொதிப்படைந்த சம்பந்தர் இதை இவ்வளவுபேரும்கொழும்பில் இருந்தே பேசியிருக்கலாம் என்று மட்டகளப்பு எம்பிமாரை பார்த்து கத்தினாராம் 
இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு இன்று மாலை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது. இன்று தமிழரசுக்கட்சியின் செயற்குழு, மற்றும் மத்திய குழுக்களின் கூட்டம் நடைபெற்றது.
நாளை காலை 9மணிக்கு கட்சியின் பொதுச்சபை கூடி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளது. பொதுச்சபை கூட்டத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயற்குழு ஆகியன தெரிவு செய்யப்பட உள்ளன. இக்கூட்டங்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்திலேயே நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர். கட்சியின் தலைவர், மற்றும் செயலாளர் பதவிகள் போட்டியின்றி சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் தெரிவு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசிய மகாநாடு மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்திலேயே நடைபெற உள்ளது
»»  (மேலும்)

| |

இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்புக்கு விஜயம்


 இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக்கே காந்தா இன்று (25.5.2012) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இந்திய உயர்ஸ்த்தானிகரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு நகரில் புனரமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பார்வையிட்டு  மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்களை தூவி வணக்கம் செலுத்தினார்.
காந்திசேவா சங்கம், மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவசாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், காந்திசேவா சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் இந்த மகாத்மா காந்தியின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு வைபவங்களிலும் இன்று கலந்து கொண்டார்.

»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மக்களின் மன உணர்விற்கு கடவுள் கருனை காட்டினார் மின்சார ஒழுக்கு காரணமாக மட்டு. நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் தீ ! மின்சாரத்திற்கும் பிடிக்க வில்லை தமிழரசுக்கட்சியின் மாநாடு!

மட்டக்களப்பு அரசடியிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால்இ மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
மண்டபம் அமைந்துள்ள கட்டடத்தில் மக்கள் வங்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் பலநோக்கு அபிவிருத்தி சபை உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசியமாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது
தமிழரசுக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு இன்றும் நாளையும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம் புதிய செயற்குழு கூட்டம் புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த நிலையில்இ தேசிய மாநாடு இடம்பெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் புகைமண்டலமாகக் காணப்பட்டது.
இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
»»  (மேலும்)

| |

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ம், 26ம். 27ம் திகதிகளில் கூட்டமைப்பின் 14 வது தேசிய மாநாடு இடம்பெற இருக்கின்றது. 25.26.27 ம் திகதிகளில் மட்டக்களப்பின் கரி நாளாக அனுஸ்டிக்கும்படி பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அத்துண்டுப் பிரசுரத்தில் கூட்டமைப்பு துரோகிகளின் துரோக நாளான 25.26.27ம் திகதிகளை கரி நாளாக அனுஸ்டிக்கும்படி மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது
»»  (மேலும்)

5/24/2012

| |

மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியை உருவாக்கிய வில்லியம் ஓல்ட் சிலை சேதப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள கௌரவ ரெவரட் வில்லியம் ஓல்ட் என்பவரின் உருவச்சிலையின் கை மற்றும் அச்சிலையின் கையிலிருந்த விளக்கு என்பன நேற்று  (23.5.2012) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த்த திரச்சபையின் முனாமை குரு கௌரவ எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.
இன்று காலை கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மேற்படி உருவச்சிலையின் கை பகுதி மற்றும் அச்சிலையின் கையிலிருந்த விளக்கு என்பன சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டேன்.
இதையடுத்து இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன் என கௌரவ எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.
1814ம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட்டவரான கௌரவ ரெவரட் வில்லியம் ஓல்ட் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியை உருவாக்கியதுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என கௌரவ டெரன்ஸ் தெரிவித்தார்.
இவரின் நினைவாக 2001ம் ஆண்டு மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக உருவச்சிலை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

| |

எகிப்து ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

5 கோடிப் பேர் வாக்களிக்க தகுதி
எகிப்து ஜனாதிபதி தேர்தலின் முதல் நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இரண்டு தினங்கள் கொண்ட தேர்தலில் இன்றைய தினத்திலும் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 கோடிப் பேர் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமான காலை 8 மணிக்கு முன்னரே பல வாக்குச்சாவடிகளிலும் வாக்குகளை பதிவுசெய்ய மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதில் எகிப்தின் அலக்சான்ட்ரியா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்குகளை பதிவுசெய்ய நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருக்கும் அல் ஜெkரா ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இதே நிலை தலைநகர் கெய்ரோவிலும் இருந்ததாக அல் ஜkரா கூறியுள்ளது.
எகிப்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி மாற்றத்தின் கடைசி தேர்தலாக எகிப்து ஜனாதிபதி தேர்தல் கருதப்படுகிறது. மக்கள் எழுச்சிக்கு பின்னர் எகிப்தில் ஆட்சியில் இருக்கும் இராணுவ கவுன்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஆட்சியை கையளிப்பதாக உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாதபட்சத்தில் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு செல்லும். இதன்போது முதல் சுற்றில் முதல் இரு இடங்களையும் பெறும் வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடவுள்ளனர். இரண்டாவது சுற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்த தேர்தலில் வலுவான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் மொஹமட் மொர்சி, முன்னாள் அரபு லீக் தலைவர் அமர் மூஸா, ஹொஸ்னி முபாரக் அரசின் பிரதமர் அஹமட் ஷபீக் மற்றும் முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அப்துல் மொனைம் அபுல் பது ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

| |

முதியோருக்கான கொடுப்பனவு300 ல்இருந்து ஆக 1000 அதிகரிப்பு


இலங்கையில் வாழும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 11 வீதமாக காணப்படுகின்றது. கல்வி யறிவும், சுகாதார வசதிகளும் அதிகரித்த மையே நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சமூக சேவைகள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சனத்தொகையில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 193 பேர் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர். எமது நாட்டை பொறுத்த மட்டில் ஆண்களின் ஆயுட்காலம் 73 வருடங்களாகவும் பெண்களின் ஆயுட்காலம் 76 வருடங்களாகவும் காணப்படுகின்றன.
இலங்கையின் கல்வி அறிவு 96 வீதமா கவும், சுகாதார வசதிகள் 98 வீதமாகவும் அதிகரித்ததன் காரணமாகவே முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தொற்று நோய்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
எனவே, தான் நாம் முதியோர் பராமரிப்பு, முதியோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதுவரை முதியோருக்கு அரசினால் உதவித் தொகையாக 300 ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்களின் நலனை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜும் மாதம் முதல் 1000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.
தேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல பெயர்களில் முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 248 பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலத்தில் சகல முதியோர் இல்லங்களும் கட்டாயம் பதியப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்  
»»  (மேலும்)