கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும், மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும் விஷமிகளால் உடைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே ஆனால் நமது மண்ணின் மைந்தர்களின் சிலை உடைப்பு பெரிதாக ஊடகங்களில் வெளிக்கோணரப்பட வில்லை . வீட்டிற்குள் படுத்துக் கொண்டு அறிக்கை விட்டுள்ளார் சீ.யோகேஸ்வரன் பா.உ அவர் தனது அறிக்கையில் எமது மண்ணின் மைந்தர்களை பற்றியே குறிப்பிடவில்லை அவருக்கு அரசின் மேல் பழி போட வேண்டும் அதற்கு நமது மண்ணின் மைந்தர்கள் சுவாமி விபுலானந்த அடிகள் மண்டூர் பெரியதம்பிப்புலவர் அரசியலுக்கு அப்பாள் இருந்தவர்கள் அவர்கள் உடைந்தாலும் பரவாயில்லை அழிந்தாலும் பரவாயில்லை என்பதை இவரது அறிக்கை தெளிவாக காட்டுகின்றது
"இந்திய நாட்டிற்கு விடுதலையை அகிம்சை ரீதியான பெற்றுக் கொடுத்த ஒரு மகான் மகாத்மா காந்தி அதே போன்று சேவை மனப்பாங்கை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமகான் பேடன் பவல் இவர்களின் மகாத்மா காந்தி இந்திய நாட்டையும் பேடன் பவல் ஐரோப்பிய நாட்டையும் சேர்ந்தவர்.
இன்று ஜெனிபா தீர்மானத்தின் பின் இந்தியாவையும் ஐரோப்பிய நாடுகளையும் எதிரியாக நோக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கமும் அதன் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பின்னணியாகவுள்ள ஆயுதக்குழுக்கள் பலவித செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்விரு சிலைகளும் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. என சீ.யோகேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அப்போது சுவாமி விபுலானந்த அடிகள் மண்டூர் பெரியதம்பிப்புலவர் எமது நாட்டை சேர்ந்தவர்கள் எமது மண்னை சேர்ந்தவர்கள் மண்ணை நேசித்தவர்கள் ஏன் பாராளுமன்ற உறுப்பினரே அவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டது ? அவர்களை உங்களுக்கு தெரியாதா ? அல்லது அவர்களின் சிலை உடைத்தது தெரியாதா ?சுய நல அரசியலுக்காய் கிழக்கு மண்ணின் மைந்தர்களான சுவாமி விபுலானந்த அடிகள்-மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையை உடைத்ததை மறைத்து வெளிநாட்டிற்கு கபடம் ஆடும் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொள்வார்களா? அதைவிடவும் இதை அரசியலாய் நோக்காமல் சமுகம் சார்ந்த பிரச்சனையாய் நோக்கி குற்றவாளிகளை வெளிக்கோணர்வதை விடுத்து அரசின் மேல் பழி போட்டு குற்ற வாழியை காப்பாற்றம் அழவிற்கு அறிக்கை மன்னர் சீ.யோகேஸ்வரன் முளையற்றவாi ஆகிவிட்டார்ரா?