கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று(08.04.2012) ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் தேவையை கேட்டறியும் முகமாக இன்று செல்லம் குறூப் ஒப் கம்பனியின் கட்டடத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை மூலமான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். மேற்படி சந்திப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கினைந்த நிறுவனங்களின் பணிப்பாளரும் வர்த்தக சங்க தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் நடமாடும்சேவை மூலமான மக்கள் சந்திப்பிற்க்கு தலைமை வகித்ததோடு ஏற்பாடுகளையும் அவரே செய்தார்.