4/17/2012

| |

பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ¤க்கு கொழும்பில் மகத்தான வரவேற்பு * ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள கெளரவம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤க்கு, ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் கொழும்பில் நேற்று மகத் தான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் இந்த மகத்தான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினமிரவு கொழும்புக்கு வந்து சேர்ந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற் காக பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் ஜனாதிபதி செயலகத்திற்கு கோலாகலமாக அழைத்து வரப்பட்டார்.
இராணுவ பொலிஸாரின் அலங்கார வாகனங்களும், குதிரைப் படையினரும் அணி வகுத்துச் செல்ல பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் ஜனாதிபதி செயலகத்தை வந்து சேர்ந்தார். இவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பலஸ்தீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் இருநாடுகளதும் தேசிய கொடிகளை ஏற்றியதுடன் தேசிய கீதத்திற்கும் கெளரவம் செலுத்தினர். இதன் பின் பலஸ்தீன் ஜனாதிபதி இங்கு விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச் சமயம் கடற்படையினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் கைலாகு கொடுத்தனர்.
இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பலஸ்தீன ஜனாதிபதி சந்தித்தார்.
அத்தோடு இரு நாட்டு தலைவர்களும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச பிரதிநிதிகள் இணைந்து கொண்டனர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன் பின்னரே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சா திடப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளுக்கிடையில் அரசியல் ஆலோசனை தொடர்பான உடன்படிக்கை முதலில் கைச்சாத்திடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரட்டை வரி முறையையும், வருமான வரி ஏய்ப்பையும் தவிர்த்தல் தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்தானது.
இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விருந்தினர் கையேட்டிலும் ஜனாதிபதி அப்பாஸ் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வுகளில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்ன, அமைச்சர்கள் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ, ரிஷாட் பதியுத்தீன், எஸ். பி. திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் டி குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.