பாதுகாப்பு பணிக்கு சென்ற தனது பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டலுக்கு விலை மாதர்களை அழைத்துச் சென்ற விவகாரம் குறித்து கண்டிப்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த வெள்ளிக்கிழமை கொலம்பியா சென்றார். அப்போது அவரது பாதுகாப்பு பணிக்கு சென்ற பாதுகாப்பு வீரர்கள், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விலை மாதர்களை அழைத்துச் சென்றது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த இராணுவ வீரர்களிடம் தீவிரமாகவும், கண்டிப்பான முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒபாமா கூறியுள்ளார். மேலும் அவர் வீரர்கள் மீதான புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் அவர்கள் மீது கடுமையான கோபம் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.