கிழக்கு மாகாண சபையின் ஆடசிக் காலம் 2013 ஆம் ஆண்டு மே மாதம்தான் முடிவடைகின்றது. அப்படி இன்னும் கிட்டத்தட்ட ஒருவருட காலம் இருக்கின்ற வேளையில் ஏன் அவசரமாக கிழக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும். இது மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயல் இதனை நான் முழுமையாக எதிர்க்கின்றேன் எனக் கூறி இன்று(24.04.2012) இடம்பெற்ற மாகாண சபை அமர்விலே தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா சமர்ப்பித்தார். இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஹ்றூப் அவர்கள் வழி மொழிந்தார்.
குறித்த தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்துக் கூறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உண்மையில் கிழக்கு மாகாண சபையின் கலைப்பு தொடர்பில் என்னுடன் இதுவரை உத்தியோகபூர்வமாக எவரும் பேசவில்லை. எனவே இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசின் உயர்மடட்டகுழுவினர் என்னோடு பேசினால் குறித்த இப் பிரேரணை தொடர்பான விளக்கத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன்