இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இக்குழுவினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளனர். அத்துடன், வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் இயங்கிவரும் இந்தியாவின் சேவா அமைப்பினால் கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளுக்காக நடத்தப்பட்டுவரும் தொழிற்பயிற்சி நெறியினையும் இக்குழுவினர் பார்வையிடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.