இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் விஜயம் அர்த்தமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய (20.04.2012) தினம் இந்திய நாடாளுமன்ற குழுவினர்மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர் அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் அமோக வரவேற்ப்பும் அழிக்கப்பட்டது பல கோடி மதிப்பான தொழிற்பயிற்சி உபகரணங்களை இந்திய நாடாளுமன்ற குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய சந்தர்பத்தில் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சில்லிக்கொடியாறு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி மரத்தளபாடங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போது பொன் செல்வராசா பா.உ மனவிரத்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவில் இருந்து வருகை தந்த சர்வகட்சி குழுவைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து புறப்படும் பொழுது வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம்பெயர்ந்தவர்களையும் மீளகுடியமர்ந்தவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.
ஆனால் இன்று கிழக்கிற்கு அதுவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து எந்தப் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிடாமல் சிவிலியன் குழுக்களையும் சந்திக்காமல் இரண்டு வைபவங்களில் மட்டும் பற்கேற்று விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
இது எம்மைப் பொறுத்தவரையில் ஒரு கவலையளிக்கின்ற விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார் இதற்க்கு முதல் தனது அரசியல் நண்பர்களிடம் தமது கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை இன்று வந்த சிறிதரனுக்கு கொடுக்கும் மதிப்புக் கூட தமக்க தருவதில்லை என மனக்குமிறளை கொட்டித் தீர்த்துள்ளார்
எப்பதான் சுயமாக சிந்திக்கப் போறீங்களோ ?