தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகளின் உயிர்த்தியாகத்தினை நினைவுகூர்ந்து நடாத்தப்படுகின்ற வெருகல் படுகொலை நினைவு நாள் 10.04.2012 அன்று கதிரவெளி சிறுவர் பூங்காவில் பி.ப.04.00 மணிக்கு இடம்பெறும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட வீரமறவர்களின் நினைவு நாள் கொண்டாட்ட நிகழ்வு கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உயிர் நீர்த்த வீரர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்கான பிரார்த்தனைகளும் ஈகச்சுடர் ஏற்றல் நிக்ழ்வும் இடம்பெறும். இவ் வெருகல் படுகொலையில் பலியானவர்கள் சுமார் 210 போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வன்னிப் புலிகளே கொன்றொழித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.