மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் தமது கட்சியின் நிலைப்பாடு கொள்கைகள் தீர்மானங்கள் எதுவுமே தெரியாது இவ்வாறு அண்மையில் எருவில் கிராமத்தில் இடம்பெற்ற சித்திரை விளையாட்டு வழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் இந்தக் கால கட்டம் முக்கியமான ஒரு கால கட்டமாக இருக்கின்றது. கிழக்கிலே துரித அபிவிருத்தி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது.
மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிட இருப்பதாக அறிய முடிகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசுகின்ற இவர்கள் கிழக்கில் இடம்பெறும் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன? கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை ஒரு போதும் கிழக்கு மாகாண மக்கள்மிது அக்கறை கொண்டவர்கள் இல்லை.
இன்று கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் கிழக்கின் மீதோ மக்கள் மீதோ இருக்கின்ற அக்கறை அல்ல மீண்டும் சந்திரகாந்தனோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ மாகாணசபையை கைப்பற்ற விடக்கூடாது எனும் நோக்கமே. கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வேருன்ற வைத்தால் கிழக்கு மக்களை காலங்காலமாக ஏமாற்றி வரும் வரலாற்றுத் துரோகங்களை செய்ய முடியாது போய்விடும் என்ற பயத்தின் காரணமாகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவற்றையெல்லாம் உணர்ந்தும் உணராதவர்களாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இவர்களுக்க கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது. பொம்மைகள் போன்று தலைமைகள் சொல்வதைக் கேட்டு தலையசைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஓந்தாச்சி மடத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் செல்வராஜா அவர்கள் பேசும்போது பேசினார் முதலமைச்சர் எமது கட்சியின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்திற்கு மிக விரைவில் பதில் அனுப்ப்படும் என்று அவர் சொல்லி இன்று பல மாத்களாகிவிட்டது இன்னும் கடிதம் வரவில்லை.
செல்வராஜா அவர்கள் கட்சியின் உப தலைவர் அவருக்கே கட்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாத அளவிற்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.