4/23/2012

| |

. சீ சீ -இந்த பழம் புளிக்கும்* பூசாரி யோகேஸ்வரன்

இந்கிய எம்பிக்கள் குழுவை சந்திக்காதமைக்கு மட்டக்களப்பு புத்தி ஜீவிகளையும் மக்களையும் வைத்து பூசை செய்கிறார் பூசாரி யோகேஸ்வரன்


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடமிருந்து பரவலாக விடுக்கப்பட்டகோரிக்கைகளின் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புத்தி ஜீவிகள்பலரின் ஆலோசனையிலும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடனான சந்திப்புக்களில்தாம் கலந்து கொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்; தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய பாராளுமன்ற குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை குறித்து தமிழ் வின் இணையம் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு மந்திரம் உச்சரித்துள்ளார்
இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறுமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியினால் அறிவிக்கப்பட்டது. அவ்வேளை நாங்கள்மூவரும் மாவட்டத்திலேயே தங்கியிருந்தோம் சந்திப்பிற்கு முதல் நாள் இதுபற்றி எமக்குஅறிவிக்கப்பட்டது என உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார் . அந்தளவிற்க்கு இவர்கள் கட்சியினால் நடத்தப்படுகின்றனர் எப்போது திட்டமிட்ட சந்திப்பிற்க்கு முதல் நாள் அழைக்கும் மந்தைக் கூட்டமாக மட்டக்களப்பு கூட்டமைப்பு எம்பிகள் மாறிவிட்டார்களா?
இந்திய பாராளுமன்ற குழுவில் கிழக்குமாகாணம் சார்பாக கதைக்க வேண்டிய விடயங்களை நாங்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுவினருக்கு தெரிவித்துள்ளோம். என முட்டாள்தனமாக கதையளந்துள்ளார் மட்டக்களப்பு மக்களின் பிரச்சசையை யாழ்ப்பாண எம்பிக்கள் கதைப்பார் என்றால் இவர்கள் எதற்க்கு?
இந்திய பாராளுமன்ற குழுவில் தமிழ்நாட்டு பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் சார்பில்எவரும் இடம்பெறவில்லை. இக்குழுவினரின் இலங்கை விஜயம் தொடர்பாக தமிழ் நாட்டில் ஏற்பட்டஎதிர்ப்பு அலைகள் காரணமாக அவர்கள் இவ்விஜயத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை எனஅறிவித்தனர்.
இந்நிலையில் எமது மாவட்ட மக்களும் இதனை எமது கவனத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே நாமும் இந்திய பாராளுமன்ற குழுவுடன்சந்திப்புக்களில் கலந்து கொள்ளவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். என மீண்டும் மக்களை காட்டி மடையராக்கும் அளவு யோகேஸ்வரன் ஜயா துணிந்த விட்டார் யாழ்பாண எம்பிக்கள் சந்திக்க இந்திய எம்பிகளுடன் விருந்து உண்ண தேசியம் தேசியம் என குரைக்கும் யாழ் மக்கள் தடுக்க வில்லையா ? யாருக்க கதையளக்கின்றார் யோகேஸ்வரன். தமக்க கட்சியில் மதிப்பில்லை என்பதை மறைக்க மக்களையா பலி கொடுப்பது எமது மண்ணின் புத்திஜிவிகளையா பலிகொடுப்பது ?