4/06/2012

| |

நாடு திரும்பும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான பிரசாரம்

உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன் என்கிறார் பிரித்தானிய சர்வகட்சி குழுவின் தலைவர் நெஸ்பி பிரபு
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பிரிட்டனில் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவில் கேள்வியெழுப்பவிருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வகட்சிப் பாராளுமன்ற இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் நெஸ்பி பிரவு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டிருக்கும் அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிலைமையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் தொல்லைகளுக்கு உள்ளாவதாக பல்வேறு பிரித்தானிய ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் களநிலைமைக்கு முற்றாக மாறுபட்டவை என்று அவர் தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர் கள் சிலரைச் சந்தித்தபோதே நெஸ்பி பிரபு மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பிரித்தானியாவிலிருந்து அண்மையில் 400 பேர் இலங்கை திரும்பியுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ் தானிகர் என்னிடம் கூறினார். இவர்களுக்கு தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் தெரிவிக்குமாறு அவர்களுக்குக் கூறப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஆனால், தமக்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்க வில்லையென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார். புலம்பெயர்ந்தவர்களால் பிரித்தானியாவுக் குப் பாரிய பிரச்சினை, குறிப்பாக பிரிட்டிஷ் தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் போன்ற அமைப்புக்களால் பிரித்தானியாவுக்கு பாரிய பிரச்சினை இருக்கிறது அமைப்புக்கள் சட்டவிரோதமான பணவசூலிப்பில் ஈடுபடுவதுடன், ஈழம் அமைப்புக்காக நிதி சேகரிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
வடபகுதியில் பல்வேறு வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களைச் சந்தித்து வெளிநாட்டு அமைப்புக்களால் ஏதாவது முதலீடுகள் வடக்கில் செய்யப்பட்டுள்ளனவா என்று விசாரித்தேன்.
எனினும், அவர்களின் பதில் எதிர்மறையானதாகவே உள்ளது. பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் வேறு நோக்கங்களுக்காகவே அங்கு தங்கியுள்ளார்கள் என்பதை நான் நாடு திரும்பியதும் வெளிப்படுத்தவுள்ளேன். வடபகுதியில் பல வைத்தியசாலைகளில் ஒருசில தமிழ்பேசும் வைத்தியர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் சேவைக்கு வருவதில்லையென சாதாரண மக்கள் கூறினார்கள்.
வைத்தியர்களுக்கு அரசாங்கம் போதி யளவு சம்பளம் வழங்குகின்றபோதும் தமிழ் பேசும் வைத்தியர்கள் தமது பிரதேசங்களில் சேவைசெய்யவிரும் புவதில்லை. வடபகுதியில் முதலீடு செய்திருக்கும் தமிழ் பேசும் நண்பர்கள் பலர் இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ளனர்.
2009 இல் பயங்கரவாதத்தை ஒழி க்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைக ளின் போது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த டேவிட் மிலிபான்ட் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் ஐ.சி.ஆர்.சி. ஆற்றிய சேவைகளை குறைத்து மதி ப்பிடும் வகையிலான அறிக்கையுடன் பிரித்தானியா திரும்பியிருந்தமை குறி த்து டேவிட் மிலிபான்டுக்கு முறைப் பாட்டுக் கடிதமொன்றை நான் அனு ப்பவுள்ளேன்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போதியளவு உணவு வழங்கப்பட வில்லையென அமைப்புக்கள் மீது குற்றஞ்சாட்டும் வகையில் டேவிட் மிலிபான்ட் தொலைக்காட்சியொன்றுக்குக் கூறியிருந்ததை நான் பார்த்தேன், பொறுப்புவாய்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து பிரபுக்கள் சபையில் எதிர்வரும் மாதங்களில் விவாதமொன்றை நடத்துவதற்கும் நான் எதிர்பார்த்துள்ளேன்.
வடபகுதியில் உட்கட்டமைப்பு பாரியளவு மாற்றங்கண்டுள்ளது. மின்சாரம் மற்றும் நீர் வடபகுதியில் விநியோகிக்கப்படுகிறது. 700ற்கும் அதிகமானவர்களைக் கொண்டு கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாமுக்கும் நான் சென்றிருந்தேன். 6 ஆயிரம் பேர் மாத்திரமே அவர்கள் அங்கு உள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.