அன்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு இன்றைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிம்ம சொற்பனமாக திகழ்கின்றார்.
கடந்த காலங்களில் இருந்த எமது தமிழ் அரசியல் வாதிகள் ஏன் இன்று இருப்பவர்கள் கூட நிலையாக எதனையுமே சாதிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஒருகட்டடத்திற்கான அடிக்கல்லை கூட நாட்ட முடியாமல் பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இருந்த தமிழ் அரசியல்வாதிககள் அனைவருமே ஒரு கல்லை நடுவார்கள் அது அப்படியே இருக்கும். பின்னர் இன்னொருவர் வந்து மீண்டும் அதே இடத்தில் நடுவார்கள். இப்படியான சூழல்தான் அன்று இருந்தது. ஆனால் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஓர் அடிக்கல் நடுவதென்றால் நன்கு திட்டமிட்டு அதற்கான நிதிகளையெல்லாம் திரட்டிய பின்பே செய்வார். இவ்வாறான ஓர் சிறந்த சேவையாளராக இருக்கின்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் அன்றை மற்றும் இன்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொற்பனமாக திகழ்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவி தவிசாளர் அருனாசலம் செல்வேந்திரன் இன்று (03.04.2012) மட்ஃ விபுலாநந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.
தொடர்ந்து பேசுகையில் இன்றைய காலத்தின் தேவையினை உணர்ந்து மக்களின் உரிமைக்காக மாத்திரமின்றி அவர்களது அபிவிருத்தி மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கும் களம் அமைத்துக்கொடுத்து தனியான ஓர் அரசியல் கட்சியை தலைமையேற்று நடாத்திக்கொண்டிருக்கின்றார். எனவே நாங்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மாத்திரமின்றி அதன் ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கும் நாங்கள் கைகோர்த்தவர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.