உலக புத்தக தினத்தை முன்னிட்டு இன்று (23.04.2012)பேத்தாழை பொதுநூலகத்தில் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடப்பட்டது. நூல் குறித்த விழிப்புணர்வு நூல்களின் மகத்துவத்தை ஞாபகமூட்டல் என்கின்ற அடிப்படையில் நிகழ்ந்த இவ்விசேட நிகழ்வு பேத்தாழை பொதுநூலகத்தின் நூலகர் திரு.தி.சரவணபவான் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 85க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய - விசேட வினாவிடைப் போட்டியும் ‘புத்தக தின கொடி அணிதல் நூல்களின் பயன்பற்றி விளக்குகின்ற வாக்கிய அட்டைகள் காட்சிப்படுத்தல் அரியபெரும் உசாத்துணை நூல்களைப் பார்வையிடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் ஜனாப் எஸ்.எம்.சிஹாப்தீன் கலந்துகொண்டார். வினாவிடைப்போட்டியில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது இந்த நூல் நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நவின வசதிகளுடன் பல மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..