மட்டக்களப்பு நகரில் இந்திய தேசத்தின் விடுதலைத்தந்தை அண்ணல் மஹாத்மா காந்தி உட்பட பல திருவுருவச்சிலைகள் உடைக்கபப்ட்டது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை(09.04.2012) மட்டக்களப்பு மாநரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் படைதரப்பு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் அரச உயர் அதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தகர் சங்கத்தினர் உட்பட உடைக்கப்பட்ட சிலைகளுடன் தொடர்புடைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த மாநாட்டில் மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.