4/25/2012

| |

கிழக்கு மாகாண உள்ளுர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பனிகளுடனான முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் கொள்வனவில் தற்போது ஈடுபட்டு வருகின்ற கம்பனிகளின் பிரமுகர்களுடனுமான முக்கிய சந்திப்பு இன்று (24.04.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாகாண கால்நடை அபிவிருத்தி  அமைச்சர் டாக்டர். துரையப்பா நவரெட்ணராஜா மற்றும் அமைச்சின் செயலாளர் பத்தமராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 மேற்படி கலந்துரையாடலில் விசேடமாக தற்போது கிழக்கு மாகாணத்தின் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதனை கொள்வனவு செய்கின்ற கம்பனிகள் அதிக அக்கறை கொள்வதில்லை என உள்ளுர் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். காரணம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவின் விலையுடன் ஒப்பிடுகின்ற போது உள்ளளுர் கம்பனிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற பால்மாவின் உற்பத்தி செலவு அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் உள்நாட்டு கம்பனிகள் பால்கொள்வனவில் அதிக அக்கறை காட்டவில்லை. உள்நாட்டு கம்பனிகளின் சார்பில் மில்கோ, நெஸ்லே மற்றும் பலவத்தை ஆகியன கலந்து கொண்டன.
மேற்குறித்த பிரச்சினை இன்று முதலமைச்சர் மற்றும் மாகாண கால்நடை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, இது தொடர்பில் எதிர்வரும் 03ம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து  பபரிசீலித்து உடனடியாக கொள்கைரீதியிலான ஓர் முடிவு எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இது எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் நாளை அனுப்பி வைப்பகப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.