4/24/2012

| |

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிமாரும் வருவார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (23.04.2012) மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் தலைமையில் மட்டக்களப்பு கச்சேரியில்  இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மவாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்திப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.இவ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் பல காராசாரமான விவாதங்களுன் இடம்பெற்றது. யோகேஸ்வரன் அவர்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். திடீரென எழுந்த  யோகேஸ்வரன் அவர்கள்  இனிமேல் அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிமாரும் வருவார்கள் என்றார். சபையில் இருந்த எல்லோரும் சிரித்தனர்.

மட்டக்களப்பு விகாரையின் தேரர் அவர்கள் இவ் அபிவிருத்திக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார.; அவ்வேளையில் தேரர் எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மட்டக்களப்பு நகரில் ஒருவர் சட்டவிரோதமாக கட்டிடம் ஒன்று அமைப்பதாகவும் அதனை மாநகரசபை சட்டவிரோத கட்டடம் என்று தடை செய்திருந்தது. அக்கட்டிடத்தினை உடைப்பதில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முக்கியமான கருத்தினை முன்வைத்தார்.

தேரர் என்ன சொல்கின்றார் என்று விளங்கிக் கொள்ளாத யோகேஸ்வரன் உடனே எழுந்து இவர் இங்கு வருவதற்கு அனுமதி இல்லை இவர் வரக்கூடாது. அடுத்த அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிகளை நான் அழைத்து வருவேன் என்றார். இதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பிரச்சினைகள் இருந்தால் பூசாரிகளும் வரலாம் என்று கிண்டலாக பதிலளித்தனர்.

உண்மையில் தேரர் சட்டவிரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும் நல்ல ஒரு விடயத்தையே முன்வைத்தார். இதை உணராத யோகேஸ்வரன் ஆசாமிப் புத்தியைக் காட்டிவிட்டார். ஒரு தேரருக்கு இருக்கும் அக்கறை இந்த ஆசாமிக்கு இல்லை.