காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவு இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதனால் சம்மேளன காரியாலயத்தின் பிராதான கதவு மிகவும் கரிய நிறத்திலும் அதன் அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் சில வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத சம்மேளன முக்கியஸ்தர் ஒருவரை இது தொடர்பாக காத்தான்குடி இன்போ வினவியபோது, இந்த நிகழ்வு அதிகாலை 1.45 மணியளவில் நடந்திருக்கலாம் என சம்மேளனம் சந்தேகப்படுவதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்மேளனத்தின் விஷேட கூட்டம் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ஒரு சந்தேக நபர் கைது செய்ததாக அறியப்பட்டாலும் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.