4/19/2012

| |

இந்திய நாடாளுமன்ற குழுவினருடனான சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை


பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு நேற்று (18.04.2012) மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்,மாவை சேனாதிராஜா,சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன்,அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன்,எஸ்.சிறிதரன் ஆகியோர் பங்குபற்றினர்.
இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 03 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் யாரும் கலந்து கொள்ள வில்லை கூட்டமைப்பில் பலவருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.செல்வராசா போன்றவர்கள் இருந்தும் கலந்து கொள்ளாதது ஏன்? இவர்களுக்க ஆங்கிலம் பேசத் தெரியாதா அல்லது ? அரசியல் அறிவற்றவர்களா போன்ற வற்றை சேர்த்தால் மட்டக்களப்பு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள மடையர்களா? என்ற வினா தோன்றுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர் அரசுடனான பேச்சு வார்த்தை தொடக்கம் வெளிநாட்டு சுற்றுப் பயனங்கள் வெளிநாட்டு பிர முகர்கள் உடனான சந்திப்புக்களிலும் கூட்டமைப்பு தலைமை மட்டக்களப்பு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதி நிதிகளை புறக்கனிக்கின்றது இவ்வாறே செயற்படுகின்றது . இது தொடர்பில் பல விமர்சனங்கள் தோன்றியுள்ளது .
இவ்வாறு புறக்கணிக்கப்பட்டும் பதவி ஆசைக்காக வாய் திறவாது யாழ் மேட்டுக் குடி தலைமையின் கிழ் அவர்களின் காலடியில் விழுந்து கிடக்கும் மானம் கெட்ட பதவி வெறியர்கள் உண்மையில் மடையர்கள்தான் அவர்கள் தமது இருப்புக்காக மட்டக்களப்பு மக்களை அடகு பிடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?