4/17/2012

| |

இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவி தலைமையிலான எம்பிக்கள் குழு கிழக்கு முதல்வருடன் சந்திப்பு.

இலங்கைக்கு இன்று (15.04.2012) வருகை தந்துள்ள இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான எம்பிக்கள் குழு எதிர்வரும் 20.04.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கிழக்கின் நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில்  அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தினை திறந்து வைப்பதுடன் இந்தியாவின் சேவா அமைப்பினால் கிழக்கு மாகாண விதவைகளுக்கு வழங்கப்படுகின்ற தொழில்பயிற்சி நெறியினையும் பார்வையிட இருக்கின்றார்கள். வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இருக்கின்ற மேற்படி தொழில்பயிற்சி நிலையத்தை பார்வையிடுவதுடன் , முதலமைச்சருடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.