4/14/2012

| |

மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டானது.மாயமான்” அரசியல் கோட்பாட்டில் எம் மக்களை ஏமாற்றத்துடிக்கும் அரசியல் தலைமைகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.* முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்

மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுகின்ற தமிழ் சிங்கள மக்களுக்கு சித்திரைப்புத்தான்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.மலர்கின்ற இச் சித்திரைப் புத்தாண்டானது எமது நாட்டின் தேசிய அரசியலிலும், சமூக அரசியலிலும் மாற்றங்களையும் திருத்தங்களையும் ஏற்படுத்தும் என்பது  எனது எண்ணம் ஆகும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர் வேட்டொலிகளும் மரனஓலங்களும் குறைந்து எமது மக்களால் கொண்டாடப்படுகின்ற 3வது சித்திரைப் புத்தாண்டானது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்புக்களையும் அபிலாசைகளையும் நிவர்த்தி செய்கின்ற தருணமாக அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுதலாகும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான கருத்துக்கள் தென்னிலங்கையில் வலுவிழந்து வருவதுடன், யுத்தத்தின் முடிவுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைக்கான பேரம் முடிவடைந்து விட்டதாக சில கடும் போக்கியல் வாதிகள் கருதத் தொடங்கினர். இதற்கு தமிழ் மக்களின் பாரம்பரிய அரசியல் தலைமைகளின் இயலாமையும், சமகாலத்திற்கு உதவாத அறியாமையும் பயன்படுத்தினர். ஆனால் சர்வதேச ரீதியில் உருவான நெருக்கடியானது மீண்டும் அனைத்து தரப்பினரையும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எனும் பாதையில் தமது பார்வைகளை குவிக்க வைத்துள்ளது.
இத் தருணமானது நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஓர் முக்கிய தருணமாகும். மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டானது தனது பிறப்புடன் தமிழ் மக்களின் அரசியல் பரினாமத்திற்கான களத்தையும் அமைத்து தருகின்றது. எமது மக்களின் கடந்த கால இழப்புக்கள், உயிர்த்தியாகங்களை கொச்சைப்படுத்தாமல் இருக்கின்ற நிகழ்கால சமூகத்தையும் வருங்கால சந்ததியையும் பாதுகாக்கின்ற எமக்கான தனித்துவமான அடையாளங்களை விட்டுக்கொடுக்காத சம அந்தஸ்த்துடனும் சுயகௌரவத்துடனும் வாழக்கூடிய அரசியல் சூழலை நாம் வடிவமைக்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் சர்வதேச அனுகுமுறைகளை கூர்ந்து கவனித்து எமது தேசிய அரசியலையும் ஆழமாக ஆராய்ந்து அதற்கான களத்தினை நாம் உருவாக்கலாம்.
இதற்கு முதற்படியாக இச் சித்திரைப் புத்தான்டில் காலங்காலமாக பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகள் எனும் போர்வையில் “மாயமான்” அரசியல் கோட்பாட்டில் தொடர்ந்தும் எம் மக்களை ஏமாற்றத்துடிக்கும் அரசியல் தலைமைகளின் பயனத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இம் முற்றுப்புள்ளியானது எமது மக்களின் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான முதற்புள்ளியாக அமைய வேண்டும். இதற்கான முதற்படியை மலர்கின்ற இச் சித்திரைப் புத்தான்டில் கிழக்கு மாகாணம் எடுத்து வைக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டானது நல்ல சிந்தனைகளுக்கும்; சிறந்த தலைமைத்துவங்களுக்கும் ஓர் களமாக அமையட்டும் என வாழ்த்துகின்றேன்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்.
முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்.