4/01/2012

| |

கொள்கைகளுக்காக கொலை செய்யும் கூட்டம் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் - கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு People Organisation for Change (POC) கொள்கைகளுக்காக கொலை செய்யும் கூட்டம் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் - கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் மக்கள் சாகலாம் கொள்கைகள் சாகாது என்று பேசி இருந்தார் இவ்விடயத்தை பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து இருந்தன. ஆனாலும் கிழக்கிலங்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் நாம் இவரின் இவ்வாறான பேச்சுக்களை வண்மையாகக் கண்டிக்கின்றோம். கொள்கைகள் என்பது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக மக்களை சாக வைக்கின்ற கொள்கைகளாக இருக்கக்கூடாது. இங்கே மக்கள் சாகலாம் கொள்கை சாகாது என்றால் அவர்களின் கொள்கைகள் எதற்கு? மக்களை சாக வைப்பதற்காகவா இவர்களின் கொள்கைகள் அமைந்திருக்கின்றன. இவர்கள் கொள்கைகளுக்காக மக்களைச் சாக வைத்துவிட்டு புதைகுளிகளிலா கொள்கைகளை வைத்து கும்மியடிக்கப் போகின்றனர். இவர்களின் கொள்கைகள் சாகாது என்றால் இவர்களின் கொள்கைகள் என்ன? ஒரு புறத்தில் மக்கள் சாகலாம் கொள்கைகள் சாகாது என்று சொல்வது சரியாக இருக்கலாம். அன்று தொட்டு இன்றுவரை கூட்டமைப்பினர் கொள்கைகளுக்காக மக்களை சாகடித்துக் கொண்டுதானே இருக்கின்றனர். தமிழீழம் பெறுவோம் தமிழீழமே இறுதி மூச்சு எனும் கொள்கையில் பல இலச்சக்கணக்காக மக்களை சாகடித்தவர்கள்தானே. இவ்வாறு பேசிய அரியநேந்திரன்கூட கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களை கொலை செய்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வந்தவர்தான். கிழக்கில் ஜோசப் பரராஜசிங்கம் வடக்கில் ரவிராஜ் சிவநேசன் ஆகியோரை இழந்திருக்கின்றோம் என்று. ஏன் இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ருந்து படுகொலை செய்யப்பட்ட கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி பற்றி சொல்லவில்லை. கிங்ஸ்லி இராசநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தான் பாராளுமன்றத்திற்கு வந்தார் என்பதனாலா? இராஜன் சத்தியமூர்த்தி தங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதனாலா? கிழக்கில் ஜோசப் பராராஜசிங்கம் மட்டும்தானா கொலை செய்யப்பட்டிருக்கின்றார்? அரியநேத்திரன் போன்றவர்கள் நிரந்தர கொள்கைகளற்று தாம் அரசியலில் இருக்க கொலையும் செய்வோம் எனும் கொள்கைக்கு இணங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இவர்களின் மக்கள் சாகலாம் எமது கொள்கைகள் சாகலாம் என்று எமது மக்களை சாகடிக்க விடக்கூடாது நாம் துரத்தியடிக்க வேண்டும். மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கிழக்கிலங்கை 31.03.2012