தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (வெருகல் படுகொலை) மாவீரர்களின் நினைவு தினம்
10 April 2012
செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (வெருகல் படுகொலை) மாவீரர்களின் நினைவு தினம் இன்று (10.04.2012) வெருகல் சிறுவர் பூங்காவில் கட்சியின் தேசிய தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இட்ம்பெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவர் அவர்கள் தனது மாவீரர்களுக்கான உரையினை ஆற்றினார். பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாலை 06.05மணிக்கு கட்சியின் தலைவரினால் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினரால் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் உப தலைவர் நா.திரவியம், கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜா, கட்சியின் முக்கியஸ்த்தர்களான துரைநாயகம் மற்றும் குமாரதுரை, கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந் வெருகல் படு கொலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 210 மாவீரர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் வெருகல் படு கொலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 210 மாவீரர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.