மட்/மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தின் மாடிக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் பாடசாலையின் விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று (03.04.2012) வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாடசாலைக்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் எமது மக்களின் கல்வித் துறையும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இவ்வாறான கல்வித்துறை வளர்ச்சிக்கு பொற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது. எமது எல்லைக் கிராமங்களிலே இருக்கின்ற மக்களின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கினறது. எனவே அவற்றையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. இவ்விடயத்தில் எமது சமூகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
எமது கல்வித்துறை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் கடந்தகால அரசியல் தலைமைகளே. அவர்கள் விட்ட தவறுகளை நாம் விடுவதற்கு தயாராக இல்லை. எது எப்படி இருப்பினும் எமது பிரதேசம் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது எண்ணம்.
இன்றைய செய்திகளைப் பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. பல தசாப்தகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கின்றது என்பதனை பார்க்கும்போது சந்தோசப்படுகின்றேன்.
கடந்த 18 ம் திகதி மட்டக்களப்பிலே நாம் நடாத்திய எமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர். அம் மாநாடு அரசியல் வட்டாரத்தில் பாரிய திருப்பு முனைகளையும். உணர்ச்சி வார்த்தைகளையும் வீரவசனங்களையும் மக்கள் மத்தியில் பேசி வாக்குகளைப் பெறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்றோரை வேலை செய்ய வைத்திருக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பில் ஒரு தேசிய மாநாட்டினை நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர் எமது கட்சியின் தேசிய மாநாட்டின் பிரதிபலிப்பே இவ்வாறானதொரு தேசிய மாநாட்டினை கூட்டமைப்பினர் நடாத்தத் திட்டமிடுவது.
பல தசாப்தகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது தேசிய மாநாட்டினை கண்டுதான் அவர்களும் ஒரு மாநாட்டினை நடாத்தவும். கட்சிக்கு புதிய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். எமது தேசிய மாநாட்டினை பார்த்தாவது ஞானம் பிறந்திருக்கின்றதே கூட்டமைப்பினருக்கு. உணர்ச்சி வார்த்தைகளை மட்டும் அள்ளி வீசி வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பினரை மக்களுக்காக ஓடி வேலை செய்ய வைத்திருகின்றோம்.
இதையே நாமும் எதிர்பார்க்கின்றோம் ஜனநாயக அரசியலில் போட்டித் தன்மை வேண்டும் அப்போதுதான் அரசியல் போட்டியின் காரணமாக அரசியல்வாதிகள் மக்களுக்காக ஓடி வேலை செய்வார்கள். எது எப்படி இருப்பினும் வெறுமனே நான்கு வருட அனுபவம் கொண்ட எமது கட்சி பல தசாப்தகால அரசியல் வரலாற்றினையும் பழுத்த அரசியல் தலைவர்களையும் கொண்ட தமிழ் தெசியக் கூட்டமைப்பினருக்கு நாம் வழிகாட்டியாகவும் அரசியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்னுதாரணமாகவும் இருப்பதில் சந்தோசமே என்றும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும். முதல்வரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான அ.செல்வேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் துரைநாயகம், கட்சியின் பொருளாளரும் முதல்வரின் ஊடகச்செயலாளருமான ஆ.தேவராஜா, கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலையின் ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.