4/01/2012
| |
சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலையை முதல்வர் சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.
சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலிலே நிர்மானிக்கப்பட்டிருந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலையினை இன்று(30.03.2012) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.
முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் நிருவாகியும் பறங்கியாமடு வித்தியாலயத்தின் அதிபருமான சு.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சி.வினோத், கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளர் தா.உதயஜீவதாஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி; தலைவர் யோகவேள்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய பொருளாளர் ஆ.தேவராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிப்பாளர் திருமதி சந்திரா ஜவனராஜ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினாகளான திருநாவக்கரசு ,; வை.பஞ்சலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்களான தவராஜா,தியாகராஜா,சிவபாலன் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.