4/24/2012

| |

பிரஞ்சுப் பிரஜைகள் 9 பேரை வெளியேற்றுகிறது இந்தியா

இந்தியாவில் மாவோயியக் கிளர்ச்சிக் காரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்படும் இந்திய அரசு சாரா அமைப்பொன்றுடன் ஒத்துழைத்ததாகக் குற்றம்சாட்டி பிரஞ்சுப் பிரஜைகள் ஒன்பது பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமென இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்த பிரஞ்சுப் பிரஜைகள் சுற்றுலாப் பயணிகளுக்குரிய விசா பெற்று இந்தியா வந்தாலும், விசா விதிகளை மீறி பிஹார் மாநிலத்தில் செயலாற்றும் அரசு சாரா அமைப்பில் இவர்கள் வேலை பார்த்துள்ளனர் என பொலிசார் கூறுகின்றனர்.
இவர்கள் விவசாயிகளைச் சந்திப்பதற்காக ஒதுக்குப்புறமான நவாடா பகுதிக்கு சென்றிருந்த நேரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த பிரஞ்சுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது தொடர்பில் தில்லியில் உள்ள் பிரஞ்சுத் தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
இந்தியாவில் அணுசக்தி எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார் எனக் கூறி ஜெர்மன் பிரஜை ஒருவரை கடந்த பிப்ரவரியில் நாட்டை விட்டு இந்தியா வெளியேற்றிருந்தது.