4/06/2012

| |

ஒடிசா மாநில அரசு பணிந்ததுகடத்தப்பட்ட எம்.எல்.ஏயை மீட்க 27 மாவோயிஸ்டுகள் விடுதலை

ஒடிசாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மற்றும் இத்தாலி சுற்றுலா பயணி பாவ்லோ போகஸ்கோ இருவரையும் மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இருவரையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் 13 நிபந்தனைகளை அறிவித்தனர். அத்தோடு வியாழக்கிழமை வரை காலக்கெடுவும் விதித்தனர்.
எம்.எல்.ஏ. கதி என்ன ஆகுமோ என்று கூறப்பட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம் ஒடிசா மாநில அரசு, மாவோயிஸ்டுகளின் முக்கிய கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது. அதன்படி 27 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அந்த 27 பேரில் 8 பேர் மாவோயிஸ்டுகள். மற்றவர்கள் சாசி மூலியா எனும் ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறையில் இருந்து விடுவிக்கப்படும் 27 பேரும் யார் - யார் என்ற விவரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. எனவே எம்.எல்.ஏ.யை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மாவோயிஸ்டுகள் 27 பேர் விடுதலையாவதில் மகிழ்ச்சி அடையவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 13 கோரிக்கைகளில் ஒன்று தானே நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்றைய 12 நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.