4/01/2012

| |

அநாதரவற்ற 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கோட்டக் கல்வி பணிப்பாளரை பிணையெடுத்த - தமிழ் தேசியக் கூட்டமைப்பு ''ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர்''

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த அநாதரவற்ற13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்க விட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகளை பெரும் தொகைப் பணத்தை பேரம் பேசி எடுத்து பாலியல் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தே ஆவேன் என ஊடகவியலாளருக்கு சலால் விடுத்திருந்தார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இச்சந்தேக நபர் மீதான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றசாட்டில் இச்சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபர் தொடர்பிலான பொலிஸாரின் புலன்விசாரணைகள் முடிவடைந்துள்ளது எனவும் அவரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க வேண்டாம் என சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா வாதாடினார். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.சுகாஸ் மற்றும் மணிவண்ணன் ஆஜராகி சந்தேக நபரின் குற்றங்கள் பாரதூரமானது இவரைப் பிணையில் விடுதலை செய்தால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்பு இருப்பதாக தனது வாதத்தில் சுட்டிக் காட்டினார். இருவரின் வாதங்களைக் கேட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசாராச இதனை அடுத்து சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்யதார். சந்தேக நபர் 50,000 ரூபா காசுப்பிணையிலும் தலா 300,000 ரூபா மூன்று ஆட்பிணையிலும் ஆட்பிணையாளிகள் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் என் உத்தரவிட்டுள்ளார்.