4/21/2012

| |

இஸ்லாமாபாத்தில் 127 பேர் பலியான விமான விபத்துப் பகுதியில் மீட்பு பணி

விமானம் சேதம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைவருமாக 127 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், விமானம் சிதறுண்ட இடங்களில் அதிகாரிகள் மீட்புப் பணி நடத்திவருகின்றனர்.
விமான சிதிலங்கள் விழுந்து கிடக்கும் இடங்களில் மீட்புப் பணியாளர்கள் சடலங்களைக் கண்டெடுத்து வருகின்றனர். விமான இயக்கப் பதிவுக் கருவியையும் அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
விபத்துக்குள்ளானது போஜா ஏர் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானபோயிங் 737 ரக விமானம் ஆகும்.
கராச்சியில் இருந்து வந்த இவ்விமானம் இஸ்லாமாபாத்தில் தரையிறங்கும் வேளையில் கடுமையான சூறைக்காற்றில் சிக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார், தமது உறவுகளை அடையாளம் கண்டு பெற்றுச்செல்வதற்காக இஸ்லாமாபாத் மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
விமானம் விபத்து பற்றிய விசாரணைகளின் முடிவு வெளியாகும் வரை போஜா ஏர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமாபாத் அருகேயுள்ள ஹுசைனாபாத்தில் இந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
அந்த கிராமத்தில் இருந்தவர்களில் எவரும் காயமடைந்ததாகவோ உயிரிழந்ததாகவோ இதுவரை தகவல் இல்லை