கடந்த 06.04.2012 மட்டக்களப்பில் 4சிலைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டது. குறித்த சிலைகள் தற்போது புணர்நிர்மானம் செய்யப்பட்டு அதே இடத்தில் நிறுவப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் உருவச்சிலையை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.