4/23/2012

| |

மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் கோரிக்கையையை அடுத்து ஆரையம்பதி காத்தான்குடி எல்லை 02.05.2012ம் திகதி வரையறுக்க தீர்மானம் !

ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வரையறுப்பது தொடர்பாக மிக நீண்டகாலமாக இரு பிரதேச மக்களிடமும் மனக்கசப்பும் இடைக்கிடையே இனமுறுகலும் ஏற்படுவது வழக்கமாகி வந்து. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் மாகாண சைபயிலும் இது தொடர்பாக உரிய நிர்மானங்களை மேற்கொண்டு எல்லைகளை வரையறை செய்து நிருவாகங்களை மாற்றித்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இன்று (23.04.2012) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது ஏனைய அரசியல் பிரமுகர்களால் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று சட்டப்படியாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி காத்தான்குடி எல்லை நிர்மானிப்பது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிருவாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடமும் மகளீர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடமும் சுட்டிக்காட்டியதை அடுத்து எதிர்வரும் 02.05.2012ம் திகதி ஆரையம்பதி காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய அரச அதிபரின் ஏற்பாட்டில் நிருவாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு எல்லை நிர்ணயம் செய்துவைக்கப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.