4/30/2012

| |

சந்திரகாந்தன் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – வீதி அபிவிருத்தி அமைச்சரின் பிரதி செயலாளர் ஸலாவுதின்

மூவின மக்களுக்காகவும் பாகுபாடின்றி செயற்படும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு இன்று மண்டூர் தம்பலவத்தை பாடசாலை வீதியை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வீதி அபிவிருத்தி அமைச்சரின் பிரதிசெயலாளர் ஸலாவுதின் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று முதலமைச்சர் யார் என்கின்ற பிரச்சினைகள் இடம்பெற்ற வேளையில் நாம் குழப்பத்துடனேயே இருந்தோம். யார் இந்த பிள்ளையான் என்பது எமக்குத் தெரியாது அவரது குணாதிசயற்கள் தெரியாது. ஆனால் இன்று இவர் முதலமைச்சராக கிடைத்ததையிட்டு பெருமிதமடைகின்றோம்.
இந்த முதலமைச்சரைப்போல் வேறு எவரும் ஒரு முதலமைச்சராக எமக்குக் கிடைக்கமாட்டார்கள். மூவின மக்களையும் சமமாக மதித்து சேவை ஆற்றுகின்றவர்தான் எமது முதலமைச்சர் அவர்கள். இப்பொழுது மாகாணசபை கலைப்பு பற்றிப் பேசப்படுகின்றது அவ்வாறு நடக்குமானால் மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்.
இன்று எமது பிரதேசத்திலே பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றது என்றால் அதற்குக் காரணம் கௌரவ முதலமைச்சர் அவர்கள்தான். கடந்த கால அரசியல் வரலாற்றில் எத்தனையோ தமிழ் அரசியல் தலைமைகள் இருந்தும் அவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றனர். முதலமைச்சர் அவர்கள் என்ன செய்திருக்கின்றார் என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்தகால அரசியல்வாதிகளால் 3 கிலோமீற்றர் பாதையினைக்கூட அமைக்க முடியவில்லை ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று 300 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வீதிகளை அமைத்திருக்கின்றார்.
முதலமைச்சர் எத்தனையோ வேலைகளைச் செய்தாலும் ஊடகங்கள் அவற்றை வெளியிடுவதில்லை. ஆனால் முதலமைச்சர் பற்றி தவறான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. உண்மைகளை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும். இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடரவேண்டுமாக இருந்தால் எமது முதலமைச்சரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

4/29/2012

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக களுதாவளையில் ஆர்ப்பாட்டம்

sam_0088.jpgSAM_0093.JPG
களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்விற்கு அழைக்கப்பட்டு சென்றிருந்த கிழக்கிலே எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் இராஜதுரை அவர்கள் மேடையில் பேசச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டி தகாத வார்த்தைகளால் சிவாஜிலிங்கம் அவர்கள் நாகரிகமற்ற முறையில் அவமானப்படுத்திய செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாயி யோகராஜா கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்த கிழக்கு மாகாண மக்களால் சிறந்த அரசியல் தலைவராக போற்றப்படுகின்றவரை யாழ்பாணத்துக்கு அழைத்து துரோகி சக்கிலியன் போன்ற நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியமை எமது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களையும் அவமானப் படுத்தியமைக்கு சமமானதாகும். கிழக்கு மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவரை அழைத்து மேடையில் வைத்து அவமானப்படுத்தியமை வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
இராஜதுரை ஐயா அவர்கள் தானாக செல்லவில்லை அவர்களே அழைத்தார்கள் அவர்களின் அழைப்பின் பேரின் சென்றவருக்கு அவர்கள் கொடுத்த பரிசுதான் இது. இது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் எங்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலானது கிழக்கு மக்கள் எல்லோருக்கும் செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
வடக்கு சாதிவெறி பிடித்த மேலாதிக்க சக்திகள் கிழக்கு மக்களை சாதி குறைந்தவர்களாக பார்க்கின்ற பார்வை இன்னும் இருக்கின்றது. அதன் வெளிப்பாடே ஐயா இராஜதுரை அவர்களை சக்கிலியன் என்றும் துரோகி என்றும் வசை பாடச் செய்திருக்கின்றது.
கிழக்கைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலை கூட்டமைப்பிலே இருக்கின்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தஒரு அறிக்கையினையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயம். இவர்கள் தொடர்ந்தும் வடக்கு மேலாதிக்க சக்திகளுக்கு துணை போகின்றவர்களாகவே இருக்கின்றனர்.
இச் செயலை கிழக்கு மக்கள் சார்பில் வண்மையாகக் கண்டிப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் செயல்தொடர்பில் மெளனிகளாக இருப்பார்களானால் அவர்களுக்கெதிராகவும் நாம் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
»»  (மேலும்)

4/28/2012

| |

தந்தை செல்வாவின் சமாதியில் இடம்பெற்றிருக்கக் கூடாத அவமானத்தின் உச்சம் இது.


தந்தை செல்வா அவர்களின் 35 ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வழமைக்கு மாறாக இவ் நினைவுதினத்தில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 30 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய அவரின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு இராசதுரை அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு இராசதுரை அவர்களின் பிரசன்னம் நிகழ்ந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் எழுந்து அவரை திட்டித் தீர்த்திருக்கின்றார். இராசதுரை துரோகி என்று கோபாவேசமாக கூக்குரலிட்டதோடு மட்டுமன்றி அவரை நோக்கி கையில் இருந்தவற்றையெல்லாம் விட்டு வீசி அநாகரிகமான முறையில் நடந்திருக்கின்றார். அதுமட்டுமன்றி அவர் வாயில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் சொல்லும் தரமற்றவை. மட்டக்களப்பான், துரோகி, சக்கிலியா..... என்று ஒரு தெருச்சண்டியனுக்கு நிகராக தரம்தாழ்ந்த முறையில் ஆவேசம்கொண்டு அவர்மீது பாய்ந்துள்ளார். 

இது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல என நாம் கருதுகின்றோம். ஒரு முதுபெரும் அரசியல் தலைவனை அழைத்து அவமதித்திருக்கும் இச்செயற்பாடானது குறித்துசிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் இதுவரை கண்டிக்கப்படவில்லை. இது சாதாரண இருவருடைய குடும்பச்சண்டை அல்ல. தந்தை செல்வாவின் சமாதியில் இடம்பெற்றிருக்கக் கூடாத அவமானத்தின் உச்சம் இது. 

வட கிழக்கு இணைந்த தாயகமே எமது உயிர் மூச்சு என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் அனைவருக்குமே இந்நிகழ்வு சமர்ப்பணமாகட்டும். இராசதுரை அவர்கள் ஒரு தனி நபர் அல்ல. தமிழர் அரசியல் வரலாற்றில் அவர் ஓர் சரித்திரம். கிழக்குமாகாணத்தின் தந்தையாக இன்றுவரை மதிக்கப்படுபவர். அவரது செயற்பாடுகள் தமிழர் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் அபரிதமானவை. அதன் எதிர்வினையே அவர் மீது யாழ்ப்பாணத் தலைவர்கள் கொண்டிருக்கும் என்றுமே மங்காத காழ்ப்புணர்வின் அடிநாதமாகும். அந்தவகையில் இராசதுரை அவர்களுக்கு நடந்த இந்த அவமதிப்பானது கிழக்கு மாகாணமக்கள் ஒவ்வொருவருக்குமான அவமதிப்பாகும். இந்த அவமதிப்பு கிழக்கு வடக்கு அரசியல் கொண்டிக்கும் அகமுரண்பாடுகளின் வெளிப்பாடாக இடம்பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்வும் இதன் தொடர்வினைகளும் எதிர்கால இலங்கை தமிழர்களின் அரசியலில் நிகழ்த்தப்படப்போகும் பாதிப்புகள் மிக அதிகளவாகவே இருக்கும்.


கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. யான சிவாஜிங்கம் அவர்கள் ரெலோ அமைப்பின் தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் குரலை சர்வதேசத் தரத்தில் ஒலிக்கச் செய்கிறேன் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் கூட. இப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த தலைமைப்பீடங்களை நிரப்புகின்ற இவர்களது மெய்யும் மனமும் எவ்வளவு தூரம் அசுத்தங்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றது மேற்படி நிகழ்வு. தனது உரிமை பற்றிப்பேசுகின்ற மட்டக்களப்பான் துரோகி என்று சுட்டுவிரல் நீட்டுகின்ற யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் முழு வடிவமாக பிரபாகரனுக்கு பின்னர் சிவாஜிலிங்கம் விசுவரூபம் எடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி ஒரு தலித் சமூகத்தின் பெயரைச் சொல்லி வைதல் என்பது அப்பட்டமான யாழ்மேலாதிக்க வேளாள பாரம்பரியத்தின் கைவிடமுடியாத வெளிப்பாடாகும். இந்த கேவலமான ஆதிக்க குணாம்சங்களே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படைத் தராதரமாக இருக்கவேண்டும் என்பதை சிவாஜிலிங்கம் மென்மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இவர்களா எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தை அலங்கரிப்பவர்கள்? இவர்களா எமக்கு தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என்று போதனை செய்பவர்கள்? இவர்கள் தலைமையிலா தமிழர்களுக்கு விடுதலையும் தீர்வும் கிடைக்கப்போகின்றது? என்று பல்லாயிரம் கேள்விகளுடன் ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு இது. இராசதுரை அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அவமதிப்ப்பினை யார் யாரெல்லாம் எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப் போகின்றார்கள், இதை யார் யாரெல்லாம் அமைதிகாத்து ஆதரிக்கப்போகின்றார்கள் என்பதை காலம் பதிவு செய்யக்காத்திருக்கின்றது. இதில் மௌனம் கலைத்து முதற்கையெடுக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு நினைவுதின நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் முக்கிய பங்குவகித்த தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசனுக்கு உண்டு என்பதை பிரசித்தம் செய்யவேண்டியது எங்கள் கடமையெனக் கருதுகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.
27-04-2012

»»  (மேலும்)

4/26/2012

| |

காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தின் கதவு தீ மூட்டப்பட்டுள்ளது

காத்தான்குடி பள்ளிவாயல்கள்  முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவு இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதனால் சம்மேளன காரியாலயத்தின் பிராதான கதவு மிகவும் கரிய நிறத்திலும் அதன் அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் சில வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத சம்மேளன முக்கியஸ்தர் ஒருவரை இது தொடர்பாக காத்தான்குடி இன்போ வினவியபோது, இந்த நிகழ்வு அதிகாலை 1.45 மணியளவில் நடந்திருக்கலாம் என சம்மேளனம் சந்தேகப்படுவதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்மேளனத்தின் விஷேட கூட்டம் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ஒரு சந்தேக நபர் கைது செய்ததாக அறியப்பட்டாலும் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார்!

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற கமலநாதன் அவர்கள் தமிழ் துறையில் வித்துவான் பட்டம் பெற்றவராவார்.
இவர் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது. மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றை தேடும் பணியில் இறங்கிய கமலநாதன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளை தேடி அதனை அச்சுவடிவில் கொண்டுவந்த பெருமையை பெற்றார். ஓலைச்சுவடிகளில் இருந்த வரலாற்று தடயங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணியில் இறங்கிய வித்துவான் கமலநாதன் அவர்களும் அவரது துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உருவானதே மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலாகும்.
மட்டக்களப்பில் மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களுக்கு பின்னர் இருந்த நடமாடும் தமிழ் நூலகம் கமலநாதன் அவர்களாகும். ஆதனால்தான் கிழக்கு பல்கலைக்கழகம் அந்த வித்துவான்கள் இருவருக்கும் இலக்கிய கலாநிதி பட்டங்களை வழங்கி கௌரவித்திருந்தது.
மட்டக்களப்பு வரலாற்றைப்பற்றி பேசுவோர் எஸ்.ஓ.கனகரத்தினம் எழுதிய Monograph of Batticaloa என்ற ஆங்கில நூலையும் அவரது மருமகனான எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் மட்டக்களப்பு மான்மியத்தையுமே எடுத்துக்கொள்வர். அதன் பின்னர் சரித்திரத்தை ஆதாரங்களுடன் பேசும் நூலாக வெளிவந்ததுதான் சா..கமலநாதன், கமலா கமலநாதன் ஆகியோர் ஏட்டுச்சுவடிகளிலிருந்து தொகுத்த மட்டக்களப்பின் பூர்வ சரித்திரமாகும்.
»»  (மேலும்)

| |

"மட்டக்களப்பு துரோகி "என சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரைக்கு யாழில் சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டம் !

யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில்தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்திம் இன்று (26.04.2012) வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்
சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போதுஇ "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி அரசின் அடிவருடி துரோகியை வெளியேற்ற வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டக்களப்பு மகானுக்கா இந்த நிலை நான் ஒரு மட்டக்களப்பான் என்ற வகையில் நான் படித்த அரசியல் வரலாறுகளையும் அழியாத மட்டக்களப்பின் அரசியல் சரித்திரத்தையும் இன்று வெளிப்படுத்த வேண்டும் யார் துரோகி ? மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 33ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த பெருமைக்குரிய இராசதுரை துரோகியா ? அல்லது இன்றய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் துரோகியா சங்கரி துரோகியா என வெளிப்படுத்த வேண்டும் இன்று ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்; எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி மட்டக்களப்பு துரோகி யை வெளியேற்ற வேண்டும் என கோசம் இட்டுள்ளார் இவர் இராசதுரைக்கு இட்ட கோசம் அல்ல ஒட்டு மொத்த மட்டக்களப்பு மக்களுக்கு இட்ட கோசம் 33 வருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் பிரதி நிதிக்கு கொடுத்த பட்டம் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதே பதே உண்மை இதற்க்கு பின்னும் வெட்கம் கெட்ட மட்டக்களப்பு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் முடியுள்ளனர் ?
யார் இந்த இராஜதுரை ?
சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரை என்று மட்டக்களப்பில் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் இராசதுரை 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு முதல் 1950ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலுக்கு பிரவேசித்திருந்தார்.
1956ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டுவரை 23ஆண்டுகள் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்தவர்
தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமாக தெரிவு செய்யப்பட்டவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இராசதுரையும் அமிர்தலிங்கமும் 1956ஆம் ஆண்டில் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.
இராசமாணிக்கத்திற்கு பின்னர் கிழக்கில் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இராசதுரையே மூத்தவராக இருந்தார். தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவி தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இராசதுரைக்கு அமிர்தலிங்கம் அப்பதவியை பெற்றுக்கொண்டது முதல் கசப்புணர்வு வளர ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் அல்லது செயலாளர் பதவிகளில் ஒன்று கிழக்கை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது அன்றே வடக்கு கிழக்க பிரிவினை உருவாகியது தவிர இன்றல்ல என்பதை யாராவது மறுக்கமுடியுமா?
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு தலைமைக்கு கிழக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர் கிழக்கு தலைமையை அழிக்க நினைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.அந்த தேர்தலின் மூலம் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட வைத்து இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என அமிர்தலிங்கம் திட்டமிட்டார்.
தொகுதிவாரியான தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்இராசதுரைக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைகளும் பொது அமைப்புக்களும் பெரும் போராட்டம் செய்தன இதனால் இராசதுரைக்கு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போது அடுத்த கபட நாடகத்தை அமிர்தலிங்கம் திட்டம் தீட்டினார். அதேதொகுதியில் செயலிழந்து போய் இருந்த தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிடவைத்தார்
இராசதுரையின் தேர்தல் பிரசார மேடைகளில் யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக மிக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண தலைமையின் கீழ் நாம் இருக்க கூடாது என்று கூட சிலர் பேசினர்.அன்றய தலைமைகள் குரல் எழுப்பின அன்று எடுத்த முடிவின் வெளிப்பாடு மட்டக்களப்பில் இன்னும் சில காலத்தில் எடுக்கப்படும் என்பது இன்றய அரசியல் நிரோட்டத்தில் இருந்து உணரக்குடியதாகவுள்ளது
தேர்தலில் இராசதுரை அமேக வெற்றி பெற்றார்
இந்நிலையில்தான் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தை சூறாவளி முற்றாக அழித்திருந்தது. சிதைந்து போன பகுதியை சிரமைக்கும் பணியில் இடுபட அரசின் உதவியை நாடினார் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அனால் மட்டக்களப்பின் சிதைவை அழிவை சிந்திக்காத யாழ்பானத்தலமை
தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசாங்க அமைச்சர்கள் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவு இட்டிருந்தது
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிதைவடந்துள்ள புனரமைப்பு பணிகள் பற்றி ஆராய்வதற்குமாக 1979ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பிரேமதாஸ மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.பிரேமதாஸாவை பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பு மக்களுக்காக சென்று வரவேற்றார். மாவட்ட செயலகத்தில் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இராசதுரை கலந்து கொண்டார்.
அதில் இருந்த கட்சி தலமைக்கும் இராசதுரைக்கும் கடிதப் போராட்டம் நடைபெற்றது
அழிந்து போன மட்டக்களப்பை மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமை. அந்த கடமையை செய்த என் மீது கட்சி தலைமை கேள்வி கேட்க முடியாது. விளக்கம் கேட்க முடியாது என இராசதுரை பதிலளித்திருந்தார்.
இராசதுரை உரிய காலத்தில் சரியான பதிலை கட்சி தலைமைப்பீடத்திற்கு வழங்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு கூறிக்கொண்டிருந்தது. அப்போது உயிருடன் இருந்த திருமதி செல்வநாயகம், திருமதி திருச்செல்வம், ஆகியோருக்கு இராசதுரை உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் தான் இவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் தன்னை திட்டமிட்டு ஒதுக்கி ஓரங்கட்ட வைப்பதும் கட்சியிலிருந்து நீக்க நினைப்பதும் மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகம் என எழுதியிருந்தார். மக்களை பற்றி சிந்தித்த தலைவன் சிதைந்த தனது மண்னை கட்டியேழுப்ப 1979ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறினார். அவருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதுதான் இராசதுரையின் வரலாறு மட்டக்களப்பு மக்களை மதிக்காத கட்சியை விட்டு ஒதுங்கினார்
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை போல இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி செய்ய வில்லை
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால்சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் இன்று உயிருடன் உள்ள சம்பந்தன் ஆனந்தசங்கரி போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது பிழையா ?
இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி செய்யும் போரினால் அழிந்த தேசத்தை கட்டமைப்பதை அன்று இராசதுரை சூறாவளியால் பாதிக்கப்பட்ட புனரமைப்பு பணிகளில் இடுபட்டவர் இவருக்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி மட்டக்களப்பு துரோகியை வெளியேற்ற வேண்டும் என கோசம் இடுவது. எந்த வகையில் நியாயம் யார் துரோகி இன்றும் வடக்கு தலைவர்கள் மட்டக்களப்பு தலைவர்களை மக்களை துரோகியாய் பார்க்கும் படலம் இன்றும் தொடர்ந்துள்ளது ? இவர்களிடம் இன்னும் கைகோர்த்து பயனிப்பது சரியா பிழையா என தீர்மாணித்து தீர்க்கமாண முடிவெடுத்து கூட்டமைப்பிற்க்கு மரண அடி கொடுப்பது மாணமுள்ள மட்டக்களப்பானின் கடமையாகும்
»»  (மேலும்)

| |

தம்புள்ளை பள்ளிவாசலும் கோயிலும் புனித பூமிக்கு வெளியே உள்ளன


தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
தம்புள்ள புனித பூமி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 3 மாதகாலத்தினுள் தம்புள்ள புனித பூமி திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
30 வருட யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகையிலே இவ்வாறு இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுத்தும் வகையில் தேவையின்றி தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இது காலவரையும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தம்புள்ள புனித பூமி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருந்தது. பிரேமதாஸ நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது தம்புள்ள நகருக்கு அப்பால் வரையான பகுதி புனித பூமியாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் பல வருடங்களாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
1994 ல் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான பின் புனித பூமி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால் மக்கள் தமது வீடுகளை உடைப்பதை விரும்பவில்லை. இதனால் மக்களுக்கு பாதிப்பின்றி புனித பூமி திட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறுதியாக நகர அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தன இருந்தபோதும் இதில் திருத்தம் செய்யப்பட்டது.
தம்புள்ள புனிதபூமி அமைப்பதற்கான பணிகள் 70 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி புத்தசாசன மதவிவகார அமைச்சின் செயலாளர், மகா சங்கத்தினர், அடங்கலான சகல தரப்பினருடனும் பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையிலே ஒரு தரப்பினர் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாகச் சென்று குழப்பம் ஏற்படுத்தினர். பேச்சுவார்த்தை மூலம் இலகுவாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினை பூதாகாரமாக்கப்பட்டு சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இங்கு இருக்கிறது. இதற்கான காணியை நானே முஸ்லிம்களுக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது முற்றிலும் தவறாகும். 3 முஸ்லிம்களின் பெயரிலே இந்தக் காணி உள்ளது 1992.2.28 ஆம் திகதி வர்த்தமானியில் இது தொடர்பான விபரம் உள்ளது.
தம்புள்ள புனித பூமி திட்டத்தை 6 மாதங்களில் முழுமையாக செயற்படுத்துவதாக பெளத்த விவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சின் செயலாளர், தம்புள்ள நகர சபை தலைவர் அடங்கலான சகல தரப்பினருடனும் நான் பேச்சு நடத்தினேன். இந்த திட்டத்தை மூன்று மாதத்தினுள் முழுமையாக அமுல்படுத்துமாறு கேட்டுள்ளோம். இதன் மூலம் சகலரும் கெளரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகள் குறித்து கவலை அடைகிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சகல மக்கள் குறித்தே நான் சிந்தித்து செற்படுகிறேன். என்னை பெளத்த விரோதியாக காட்ட சிலர் முயல்கின்றனர்.
என்னைப் பற்றி பொய் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். 20 ஆம் திகதி நடந்த சம்பவத்தை பொலிஸார் கட்டுப்படுத்தியிருக்க முடியும். யாராக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். 20 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தம்புள்ள பகுதி சிங்கள மக்கள் 100 பேர் கூட பங்குபற்றவில்லை. வெளியில் இருந்து பஸ்ஸில் அழைத்து வரப்பட்டவர்களே அதிகம் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கொரியா செல்ல முன்னர் ஜனாதிபதி கூறினார். இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வாய்ப்புள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இதற்கு துரிதமான தீர்வு ஒன்றை வழங்குவார் என நம்புகிறேன் என்றார்.
»»  (மேலும்)

4/25/2012

| |

நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் அக்னி 5 ஏவுகணை விண்ணில் பாயும் தூரம் குறைக்கப்பட்டது சீன பத்திரிகை தகவல்


இந்தியா சமீபத்தில் 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை விண்ணில் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து வெற்றி கண்டது.
இந்நிலையில், நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் ஏவுகணையின் பரிசோதனை தூரத்தை 9,000 கிலோ மீட்டரில் இருந்து 5,000 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டதாக சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இப்பத்திரிகை அக்னி - 5 ஏவுகணை சோதனைக்கு முன்பே சீனா இந்தியாவை காட்டிலும் அணு சக்தியிலும், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் பல மடங்கு முன்னேறியுள்ளதாகவும், அவைகள் மிகவும் நம்பகத்தன்மை மிக்கதாக இருப்பதா கவும், எனவே இந்தியா விற்கு இது போன்ற ஏவுகணை சோதனை தவிர்க்க இயலாத ஒன்று என முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் அப்பத்திரி கையில் அக்னி - 5 ஏவுகணை முதலில் 9,000 கிலோ மீற்றர் வரை செல்லும் வகை யில் வடிவமைக்கப்பட்டி ருந்ததாகவும், நேட்டோ நாடுகளின் நிர்பந்தத்தால் அது 5,000 கிலோ மீற்றர் ஆக இந்திய அரசு குறைத்ததாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய- சீன உறவு குறித்து அப்பத்திரி கையில், சர்வதேச நாடுகள் இவ்விரு நாடுகளையும் எதிரி நாடுகள் போல சித்தரிக்க முயல்கிறது. எனவே இதை இவ் விரு நாடுகளும் இணைந்து முறியடி க்க வேண்டும் என வும் இரு நாடுகளுக் கிடையே யான நட்பு பாலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவும், சீனா வும் இணைந்திருந் தால் ஆசிய கண்டம் வலிமையானதாக இருக்கும் எனவும், இல்லையென்றால் ஆசிய கண்டம் பல வீனமான ஒன்றாகவே இருக்கும் எனவும் மேலும் தெரிவித் துள்ளது.
»»  (மேலும்)

| |

கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதனைக்கூ தெரியாத பொம்மைகள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் -

மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் தமது கட்சியின் நிலைப்பாடு கொள்கைகள் தீர்மானங்கள் எதுவுமே தெரியாது இவ்வாறு அண்மையில் எருவில் கிராமத்தில் இடம்பெற்ற சித்திரை விளையாட்டு வழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் இந்தக் கால கட்டம் முக்கியமான ஒரு கால கட்டமாக இருக்கின்றது. கிழக்கிலே துரித அபிவிருத்தி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது.
மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிட இருப்பதாக அறிய முடிகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசுகின்ற இவர்கள் கிழக்கில் இடம்பெறும் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன? கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை ஒரு போதும் கிழக்கு மாகாண மக்கள்மிது அக்கறை கொண்டவர்கள் இல்லை.
இன்று கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் கிழக்கின் மீதோ மக்கள் மீதோ இருக்கின்ற அக்கறை அல்ல மீண்டும் சந்திரகாந்தனோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ மாகாணசபையை கைப்பற்ற விடக்கூடாது எனும் நோக்கமே. கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வேருன்ற வைத்தால் கிழக்கு மக்களை காலங்காலமாக ஏமாற்றி வரும் வரலாற்றுத் துரோகங்களை செய்ய முடியாது போய்விடும் என்ற பயத்தின் காரணமாகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவற்றையெல்லாம் உணர்ந்தும் உணராதவர்களாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இவர்களுக்க கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது. பொம்மைகள் போன்று தலைமைகள் சொல்வதைக் கேட்டு தலையசைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஓந்தாச்சி மடத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் செல்வராஜா அவர்கள் பேசும்போது பேசினார் முதலமைச்சர் எமது கட்சியின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்திற்கு மிக விரைவில் பதில் அனுப்ப்படும் என்று அவர் சொல்லி இன்று பல மாத்களாகிவிட்டது இன்னும் கடிதம் வரவில்லை.
செல்வராஜா அவர்கள் கட்சியின் உப தலைவர் அவருக்கே கட்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாத அளவிற்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

எமது மாகாண வளங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாண வழங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக அறிகின்றேன் இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் இவ்வாறு நேற்று இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பேசும்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று கிழக்கு மாகாண வளங்கள் வெளி மாகாணங்களுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்ரப்படுகின்ற மணல் அகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் குறித்த தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டனர்.
நான் நேரடியாக மணல் அகழ்கின்ற இடங்களுக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து உரிய முறையில் மணல் தடையின்றி அகழ்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மணர்களை தடையின்றி ஏற்றிச் செல்வதனையும் எமது மக்கள் கஸ்ரப்படுவதனையும் அனுமதிக்க முடியாது.
வெளி மாகாணத்தவர்கள் மண் அகழ்வதனால் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மண் அகழ்வதற்கு அனுமதி கொடுப்பவர்கள் இனிமேல் வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்u
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண உள்ளுர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பனிகளுடனான முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் கொள்வனவில் தற்போது ஈடுபட்டு வருகின்ற கம்பனிகளின் பிரமுகர்களுடனுமான முக்கிய சந்திப்பு இன்று (24.04.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாகாண கால்நடை அபிவிருத்தி  அமைச்சர் டாக்டர். துரையப்பா நவரெட்ணராஜா மற்றும் அமைச்சின் செயலாளர் பத்தமராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 மேற்படி கலந்துரையாடலில் விசேடமாக தற்போது கிழக்கு மாகாணத்தின் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதனை கொள்வனவு செய்கின்ற கம்பனிகள் அதிக அக்கறை கொள்வதில்லை என உள்ளுர் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். காரணம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவின் விலையுடன் ஒப்பிடுகின்ற போது உள்ளளுர் கம்பனிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற பால்மாவின் உற்பத்தி செலவு அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் உள்நாட்டு கம்பனிகள் பால்கொள்வனவில் அதிக அக்கறை காட்டவில்லை. உள்நாட்டு கம்பனிகளின் சார்பில் மில்கோ, நெஸ்லே மற்றும் பலவத்தை ஆகியன கலந்து கொண்டன.
மேற்குறித்த பிரச்சினை இன்று முதலமைச்சர் மற்றும் மாகாண கால்நடை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, இது தொடர்பில் எதிர்வரும் 03ம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து  பபரிசீலித்து உடனடியாக கொள்கைரீதியிலான ஓர் முடிவு எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இது எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் நாளை அனுப்பி வைப்பகப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

327 பட்டதாரிஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்பே;ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் இன்று (24.04.2012) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வே, எம் எஸ். சுபைர் ஆகியோரது பங்குபற்றுதலுடன் குறித்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி வைபவமானது கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் காலை 11.00மணியளவில் இடம்பெற்றது. மொத்தமாக இன்று 327 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதிலே தமிழ் மொழிமூலமான ஆசிரியர்கள் 256 பேரும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 71 பேருக்கும் வழங்கப்பட்டது. தமிழ் மொழிமூலமான ஆசிரியர்களில் கணிதப் பாடத்திற்கு 97 ஆசிரியர்களும் விஞ்ஞான பாடத்திற்கு 40 ஆசிரியர்களும் மற்றும் அங்கிலப் பாடத்திற்;கு 119 ஆசியர்களும் நியமனம் பெற்றார்கள்.
 குறித்த ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களிலே அதிகளவான ஆசிரியர் பற்றாக் குறைகளை எதிர் கொள்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி  அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் குறிப்பிட்டார்.

»»  (மேலும்)

4/24/2012

| |

இலங்கைப் பயணம்: மன்மோகன் சிங்குடன் சுஷ்மா ஆலோசனை

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவரித்திருக்கிறார் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்த சுஷ்மா ஸ்வராஜ்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடந்த வாரம் இலங்கை சென்றது. தமிழர்களின் மறுவாழ்வு, மீள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த அந்தக் குழு, பொதுமக்களிடமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியது.
இந் நிலையில், அந்தப் பயணம் தொடர்பாக, நேற்று மாலை இந்தியப் பிரதமரைச் சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மதாய் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
அதுதொடர்பாக இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், தங்களது இலங்கைப் பயணத்தின்போது, வடக்கில் ராணுவப் பிரசன்னத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியிடம் பேசியதாகத் தெரிவித்தார். பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ராணுவத்தினர் அழையா விருந்தாளிகளாக வருவதாகவும், கோயில்களுக்குள் நுழைவதாகவும் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். மேலும், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.
அதே நேரத்தில், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறு என்று, இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தியக் குழுவினர் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசவில்லை என்றும், அதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை மீிண்டும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம் பெறச் செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அவ்வாறு பேசும்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாகத்தான் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மாகாண சபையின் ஆட்சி காலம் முடிவடையாமல் சபையை கலைக்க கூடாது. மா.ச.உ எஸ்.புஸ்பராஜா தனிநபர் பிரேரணை.

கிழக்கு மாகாண சபையின் ஆடசிக் காலம் 2013 ஆம் ஆண்டு மே மாதம்தான் முடிவடைகின்றது. அப்படி இன்னும் கிட்டத்தட்ட ஒருவருட காலம் இருக்கின்ற வேளையில் ஏன் அவசரமாக கிழக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும். இது மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயல் இதனை நான் முழுமையாக எதிர்க்கின்றேன் எனக் கூறி இன்று(24.04.2012) இடம்பெற்ற மாகாண சபை அமர்விலே தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா சமர்ப்பித்தார். இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஹ்றூப் அவர்கள் வழி மொழிந்தார்.
குறித்த  தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்துக் கூறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உண்மையில் கிழக்கு மாகாண சபையின் கலைப்பு தொடர்பில் என்னுடன் இதுவரை உத்தியோகபூர்வமாக எவரும் பேசவில்லை. எனவே இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசின் உயர்மடட்டகுழுவினர் என்னோடு பேசினால் குறித்த இப் பிரேரணை தொடர்பான விளக்கத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன்

»»  (மேலும்)

| |

மாவட்ட பெண்கள் குழு நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகளீர்களை இணைத்து மண்முனை வட்கு பிரதேச மகளீர் அபிவிருத்தி ஒன்றியம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், பெண்களின் வாழ்வாதார வலுவாக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதே இக் குழுவின் நோக்கம்.
இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான திருமதி.செல்வி மனோகரன், திருமதி.ஜெஸ்டினா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வாழ்வாதார மேம்பாட்டு பணிப்பாளர் திருமதி.ஜ.சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

பிரஞ்சுப் பிரஜைகள் 9 பேரை வெளியேற்றுகிறது இந்தியா

இந்தியாவில் மாவோயியக் கிளர்ச்சிக் காரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்படும் இந்திய அரசு சாரா அமைப்பொன்றுடன் ஒத்துழைத்ததாகக் குற்றம்சாட்டி பிரஞ்சுப் பிரஜைகள் ஒன்பது பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமென இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்த பிரஞ்சுப் பிரஜைகள் சுற்றுலாப் பயணிகளுக்குரிய விசா பெற்று இந்தியா வந்தாலும், விசா விதிகளை மீறி பிஹார் மாநிலத்தில் செயலாற்றும் அரசு சாரா அமைப்பில் இவர்கள் வேலை பார்த்துள்ளனர் என பொலிசார் கூறுகின்றனர்.
இவர்கள் விவசாயிகளைச் சந்திப்பதற்காக ஒதுக்குப்புறமான நவாடா பகுதிக்கு சென்றிருந்த நேரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த பிரஞ்சுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது தொடர்பில் தில்லியில் உள்ள் பிரஞ்சுத் தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
இந்தியாவில் அணுசக்தி எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார் எனக் கூறி ஜெர்மன் பிரஜை ஒருவரை கடந்த பிப்ரவரியில் நாட்டை விட்டு இந்தியா வெளியேற்றிருந்தது.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிமாரும் வருவார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (23.04.2012) மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் தலைமையில் மட்டக்களப்பு கச்சேரியில்  இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மவாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்திப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.இவ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் பல காராசாரமான விவாதங்களுன் இடம்பெற்றது. யோகேஸ்வரன் அவர்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். திடீரென எழுந்த  யோகேஸ்வரன் அவர்கள்  இனிமேல் அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிமாரும் வருவார்கள் என்றார். சபையில் இருந்த எல்லோரும் சிரித்தனர்.

மட்டக்களப்பு விகாரையின் தேரர் அவர்கள் இவ் அபிவிருத்திக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார.; அவ்வேளையில் தேரர் எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மட்டக்களப்பு நகரில் ஒருவர் சட்டவிரோதமாக கட்டிடம் ஒன்று அமைப்பதாகவும் அதனை மாநகரசபை சட்டவிரோத கட்டடம் என்று தடை செய்திருந்தது. அக்கட்டிடத்தினை உடைப்பதில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முக்கியமான கருத்தினை முன்வைத்தார்.

தேரர் என்ன சொல்கின்றார் என்று விளங்கிக் கொள்ளாத யோகேஸ்வரன் உடனே எழுந்து இவர் இங்கு வருவதற்கு அனுமதி இல்லை இவர் வரக்கூடாது. அடுத்த அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு பூசாரிகளை நான் அழைத்து வருவேன் என்றார். இதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பிரச்சினைகள் இருந்தால் பூசாரிகளும் வரலாம் என்று கிண்டலாக பதிலளித்தனர்.

உண்மையில் தேரர் சட்டவிரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும் நல்ல ஒரு விடயத்தையே முன்வைத்தார். இதை உணராத யோகேஸ்வரன் ஆசாமிப் புத்தியைக் காட்டிவிட்டார். ஒரு தேரருக்கு இருக்கும் அக்கறை இந்த ஆசாமிக்கு இல்லை.
»»  (மேலும்)

| |

தம்புள்ளை விவகாரம்: 6 மாத அவகாசம் கொடுக்கப்பட்டது

20ம் திகதி நடத்தப்பட்ட போராட்டம்

தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் இன்று திங்கட்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறினார்.

ஆர்ப்பாட்டப் பேரணியின் போது வன்முறைத் தனமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.
ஊடகங்களே போலியான வீடியோ காட்சிகள் மூலம் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டதாகவும் சுமங்கள தேரர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் ஹிஸ்புல்லா கருத்து

இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின்படி, தம்புள்ளைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சுமங்கள தேரரையும் முஸ்லிம் பள்ளிவாசல் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
வரும் மூன்று மாதங்களுக்கு குறித்த பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்துவதில் பிரச்சனை இருக்காது என்று சுமங்கள தேரர் தன்னிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் குறிப்பிட்டார்.
பள்ளிவாசலை குறித்த இடங்களிலிருந்து அகற்றுவது குறித்து பள்ளிவாசல் பிரதிநிதிகளும் முஸ்லிம் மத பிரமுகர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

4/23/2012

| |

பிரான்ஸ் தேர்தல்: சார்க்கோஸி பின் தள்ளப்பட்டார்

பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தல் வாக்குப் பதிவில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அதிபர் நிக்கோலா சார்க்கோஸி, அடுத்த கட்டமாக நடக்கவுள்ள இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்க்கோஸி 27.1 வீதமான வாக்குகளையே பெறமுடிந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் 28.6 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

வரும் மே 6ம் திகதி நடக்கவுள்ள இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் நிக்கோலா சார்க்கோஸியும் ஃபிரான்ஸுவா ஒல்லாந்தும் மோதவுள்ளனர்.பிரான்ஸ் வரலாற்றில், பதவியிலிருக்கின்ற அதிபர் ஒருவர் முதற்சுற்று வாக்குப்பதிவில் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவே.
மூன்றாவது இடத்தைப் பெற்ற மரீன் லெ பென், அவரது கடும்போக்கு வலதுசாரி தேசிய முன்னணி இதுவரை பெற்ற உச்சகட்ட ஆதரவாக 18 வீதமான வாக்குகளை வென்றுள்ளார்.
முதல்சுற்றில் ஒல்லாந்த் பெற்றுள்ள மயிரிழை வெற்றி, இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கும் அடுத்தச் சுற்று வாக்குப்பதிவை உத்வேகத்துடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை அவருக்கு வழங்கியுள்ளதாக பிரான்ஸிலுள்ள பிபிசி செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

மரீன் லெ பென்

ஆளும் மத்திய வலதுசாரியான யூஎம்பி கட்சி, அதிபர் சார்க்கோஸியை வெற்றியை எப்படியாவது உறுதி செய்ய வேண்டுமென்ற முயற்சியில் கடும்போக்கு வலதுசாரி மரீன் லெ பென்னை ஆதரித்தவர்களை குறிவைத்து வாக்குவேட்டை நடத்தலாம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.
இம்முறை பிரான்ஸ் தேர்தலில் வாக்களித்தவர்களில் ஐந்தில் ஒருவர் மரீன் லெ பென்னை ஆதரித்திருக்கிறார்கள். இவர்களில் பெருமளவிலான இளைய தலைமுறையினரும் தொழிலாளர்களும் கூட இருக்கிறார்கள்.
இம்முறை பிரான்ஸ் தேர்தலில் ஐரோப்பாவை பாதித்த பொருளாதாரப் பிரச்சனைகளும் வெளிநாட்டு குறியேறிகள் தொடர்பான விடயங்களும் முக்கிய பிரச்சார விடயங்களாக இருந்தன.
கடும்போக்கு தேசிய வாதத்தையும் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான பிரச்சாரங்களையும் முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட மரீன் லெ பென், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு பற்றிய தனது நிலைப்பாட்டை வரும் மே தினத்தன்று அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
»»  (மேலும்)