3/27/2012
| |
திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டடம் முதல்வரினால் திறந்து வைப்பு.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கோனேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான கட்டிடம் இன்று (26.03.2012) திறந்து வைக்கப்பட்டது.
சுமார் பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட மேற்படி கட்டிட திறப்பு விழாவில் திருமலை வலையக்கல்வி பணிப்பாளர், மற்றும் முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.