3/07/2012

| |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தாக்கல் செய்த மனுவை இன்று (06.03.2012) நீண்ட விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி டி.கனேபொல இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தான் 18வது யாப்பு சீர்திருத்த வேளையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானதென அறிவிக்கும்படி பொடியப்பு பியசேன தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.