3/01/2012

| |

மக்களின் பேராதரவுடன் ஜெனீவாவில் இலங்கை வெற்றிவாகை சூடும்

க்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐரோ ப்பிய நாடுகள் சமர்ப்பித்து, எமது நாட்டு மக்களின் இறைமைக் கும், சுயாதிபத்தியத்திற்கும் அழுத்தங்களை கொண்டு வருவதற்கு எடு த்து வரும் முயற்சிகள் இப்போது வலுவிழந்து வருவதாக ஜெனீவாவில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையை 1505ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்தும் இலங்கையில் தலையீடு செய்து, எமது நாட்டில் பொருளாதார மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு எடுக்கும் முயற்சியாகவே இந்த ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகள் நடந்து கொள்கின்றன என்று அரசியல் அவதானி கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
1505ம் ஆண்டில் இலங்கை என்ற இந்து சமுத்திரத்தில் இருக்கும் வாசனை திரவியங்களின் வளமும், இரத்தினக்கற்களின் வளமும் இருக்கும் சிறிய தீவை மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. முதலில் போர் த்துக்கேயர் 1505ம் ஆண்டில் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத் தனர். போர்த்துக் கேயர் இலங்கைக்கு வரும்போது இலங்கையை ஆக் கிரமிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. அவ ர்கள் எங்கள் நட்டில் இருந்து இரத்தினக்கற்களையும், வாசனைத்திரவிய ங்களையும் எடுத்துச் செல்லும் வர்த்தக நோக்கத்துடனேயே இங்கு வருகை தந்தனர்.
இலங்கையில் தற்போது இருப்பவர்களைப் போன்று அன்றும் தேசத்துரோக கும்பல்கள் இருந்தன. இந்தத் தேசத்துரோகிகள் போர்த்துக்கேயரின் மது போத்தல்களுக்கும், அவர்கள் வாரி வழங்கிய வெள்ளி காசுக்கும் அடி மையாகி, எங்கள் நாட்டை போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பதற்கு அடித்த ளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூரில் உள்ள சிற்றரசர் களை காட்டிக் கொடுத்து, போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்துவதற்கு உதவும் துரோகச் செயலில் ஈடுபட்டனர்.
போர்த்துக்கேயரை விரட்டியடித்துவிட்டு, ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற் றினார்கள். இறுதியாக அவர்களையும் விரட்டிவிட்டு, இலங்கையில் அடி யெடுத்து வைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் இரு ந்த தேசத்துரோக எட்டப்பர்களின் உதவியுடன் படிப்படியாக நாட்டின் நாலா பக்கங்களையும் கைப்பற்றி இறுதியில் 1815ம் ஆண்டு கண்டி இரா ச்சியத்தையும் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இவ்விதம் வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் இல ங்கை மீது தமது படைபலத்தைக் காட்டி, ஆக்கிரமித்த ஒவ்வொரு சந் தர்ப்பத்திலும் எமது நாட்டின் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுடைய மக் கள் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுத்தம் செய்தனர். இந்த யுத்தத்தில் நம்நாட்டு வீரர்களின் வீரத்துடன் இந்த வெளிநாட்டு இராணு வத்திற்கு நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் வலு இல்லாதிருந்தது. அவர்கள் தங்கள் பீரங்கிகளை பயன்படுத்தி, எமது நாட்டின் வீர மைந் தர்களை போர்முனையில் வீர மரணத்தை தழுவச் செய்தனர்.
இன்றும் அதே பாணியில் மேற்கத்திய நாடுகள் தென்னிலங்கையில் தோன் றிய மண்வாசனையுடைய எங்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு எதிராகவும், இராஜதந்திர ரீதியிலான யுத்தத்தை ஆரம்பித்து, அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த எத்தனிக்கின்றன. இந்த மேற்குலக நாடுகளின் எந்த முயற்சிகளையும் தோற்கடிக்கக்கூடிய வகையில் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து அவரது கரங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவன் மக்கள் ஆதரவை இழந்திருந்தால் மாத்திரமே வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கு அந்நாட்டின் அரசாங்கத்தையும் அந்தத் தலைவனையும் பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயே ஈராக், லிபியா போன்ற மேலும் பல அரபு நாடுகளின் அரசாங்கங்களை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் கடந்த காலத்தில் பதவியிழக்கச் செய்ததை நாம் அவதா னித்திருக்கிறோம்.
இலங்கையில் இருப்பதை போன்று மக்கள் பேராதரவைப் பெற்ற அரசாங்க த்தையோ, அரசாங்கத் தலைவரையோ இந்த வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதிகளால் எதுவுமே செய்ய முடியாது. அவை அவ்வப்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் போன்ற போலி குற் றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கைக்கு சிறு அச்சுறுத்தல்களை மாத்தி ரமே செய்ய முடியும். அதைவிடுத்து இந்த வல்லரசு நாடுகளினால் எதை யுமே செய்ய முடியாது. இலங்கை வாழ் இனங்களுக்கிடையில் என்றுமே கருத்து மோதல்களோ, சண்டை சச்சரவுகளோ, யுத்தங்களோ நடைபெற வில்லை என்பதற்கு எமது வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. எல் லாளன், துட்டகைமுனு யுத்தம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமல்ல. இலங்கை மன்னனான துட்டகைமுனு வெளிநாட்டில் இருந்து வந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்திய எல்லாளனுடன் சண்டையிட்டு அந்த மன்னனை மரணிக்கச் செய்த யுத்தமே எல்லாளன் துட்டகைமுனு யுத்தமாகும்.
அது போன்று 13ம் நூற்றாண்டில் இருந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு சேனைகளுடன் நாம் சண்டையிட்டிருக்கிறோம். சில சந்தர் ப்பங்களில் நாம் தோல்வியடைந்து அனுராதபுரம் இராஜதானியை இழ ந்து பொலன்னறுவைக்கும் பின்னர் அங்கிருந்து தம்புள்ளை போன்ற மற்ற நகரங்களுக்கும் பின்வாங்கினோம். இதனையே வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

இன்றைய மேற்கத்திய வல்லரசுகள் மீண்டும் இலங்கையை அடிபணிய வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் குள்ளத்தனமாக நம்நாட்டுக்கு எதிராக செயற்பட்டாலும் அந்த முயற்சிகளை எங்கள் நாட்டு மக்கள் ஐக்கியமாக, ஒரே குரலில் எதிர்த்து, ஜனாதிபதியின் கரங்களை பலப் படுத்தும் போது, அந்த மேற்கத்திய வல்லரசுகளுக்கு வாலை சுருட்டிக் கொண்டு, அடங்கிப் போவதைவிட வேறு வழியிருக்காது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க பல்வேறு நாடுகள் ஆதரவு

* ஆதரவு திரட்ட அமெரிக்கா கடும் பிரயத்தனம்
* இலங்கைக் குழு பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சு
* கொங்கோ, அல்ஜPரியா இலங்கையை ஆதரிக்க முடிவு
 
இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு கொங்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியது.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன. கொங்கோ வெளிவிவகார அமைச்சர் பெசில் இகோபி, அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் மொராட் மெசல்சி ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். சர்வதேச இஸ்லாமிய பேரவையில் அல்ஜீரியா தலைமை வகிப்பதோடு அல்ஜீரியாவின் உதவியூடாக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கைக்குழு பேச்சு நடத்தியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இலங்கைக்குழு நேற்று சக்திக்க ஏற்பாடாகியிருந்தது. ஜோர்தான் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
இதேவேளை, நேற்று முன்தினம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றிய மலேசியா மற்றும் போர்த்துக்கல் என்பன இலங்கைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளதை ஆரம்ப அமர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு சார்பான குழுக்களும் அங்கு தங்கியிருந்து அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.
எனினும் இலங்கை குழு பல்வேறு நாடுகளையும் சந்தித்து உண்மை நிலையை விளக்கி வருகிறது. எமது முயற்சியில் கணிசமான வெற்றியீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இலங்கைக் குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளதோடு அதிகாரிகள் மாத்திரம் அங்கு தங்கியிருப்பர் என அறி விக்கப்படுகிறது.
இம்மாத நடுப்பகுதியில் மீண்டும் முக்கிய அமைச்சர்கள் அங்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 23 ஆம் திகதி வரை மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற உள்ளன. இறுதி 3 நாட்களிலே வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதோடு இலங்கைக்கு எதிரான பிரேரனையை 19ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர வேண்டும் என தெரியவருகிறது.