3/02/2012

| |

ஆபிரிக்க நாடுகளும் இப்போது இலங்கையை ஆதரிக்கின்றன

எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தம் இலங்கையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண் டிருந்த இலங்கை மக்கள் நாட்டுப்பற்றுடன் அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக ஆதரித்து, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் மேற்கு நாடுகளில் மேற்கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரசார செயற்பாடுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக் கள் நாட்டுப் பற்றுடன் இருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எதிராக அந்நாடுகளில் மேற்கொள் ளப்படும் போலிப் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு இப் போது அந்தளவிற்கு உற்சாகத்துடன் செயற்படவில்லை என்று அரசாங் கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்திற்கு இலங்கைக்கு ஆதரவு திரட்டுவ தற்காக, இலங்கையின் பல பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைப்பதெ ன்று அரசாங்கம் எடுத்த முடிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சென்றிருக்கும் நம் நாட்டு அமை ச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம், ரிசாத்பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சரான எம்.எல்.எம். ஹிஸ்பு ல்லா ஆகியோர் தங்கள் இந்த விஜயத்தைப் பயன்படுத்தி இப்பேரவை யில் கலந்து கொள்வதற்கு வந்திருக்கும் வெளிநாட்டு தூதுக்குழுக்களுக் கும் அதன் தலைவர்களுக்கும் இலங்கையின் மனித உரிமை சாதனைகள் பற்றி எடுத்துரைத்து, அவர்களின் ஆதரவை வெற்றிகரமான முறையில் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் மாத்திரம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை சாதனைகளை எடுத்துரைப்பதுடன் நின்று விடாமல் உகண்டாவின் தலைநகரமான கம்பாலாவிற்கும் சென்று அந்நா ட்டு தலைவர்களுடன் உரையாடி இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் பலவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்கிறது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடபகுதிக்கு தமிழ் மொழியில் பணி யாற்றக்கூடிய 500 ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஏற்க னவே வடபகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு நியமித்திருக்கிறது என் பதையும் அமைச்சர் ஞாபகப்படுத்தினார்.
யுத்தத்தின் பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களை இப்போது அவர்க ளின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றி வைப்பதிலும் அரசாங்கம் சாத னைப்படைத்திருக்கிறதென்று அமைச்சர் பீரிஸ் உகண்டா உட்பட ஏனைய ஆபிரிக்க நாடுகளுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
யுத்தத்தை அடுத்து சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. போரா ளிகளுக்கு எவ்வித துன்புறுத்தலையும் செய்யாமல் இலங்கை இராணுவம் அவர்களை பாதுகாப்பாக தடுத்து வைத்து, கடந்த ஈராண்டுகாலமாக புனர் வாழ்வு செயற்படுகளில் ஈடுபடுத்தி அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
புனர்வாழ்வு முகாம்களில் தொழில்பயிற்சிப் பெற்று விடுவிக்கப்பட்ட முன் னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளுக்கு வங்கிக் கடன், தங்குமிட வசதி போன்ற வசதிகளை கொடுத்து, சுயவேலை முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் அர சாங்கம் உதவி செய்திருக்கிறது. தடுப்புக்காவலில் இருந்த எல்.ரி.ரி.ஈ. சந் தேக நபர்களின் கல்வியை சீர்குலைக்காமல் தொடர்ந்தும் கல்வியை மேற் கொள்வதற்கும் அரசாங்கம் உதவி செய்தது.
அதனால் இந்த ஓரிரு வருட ங்களில் சுமார் 50 எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் பல்கலைக்கழகத்தி ற்கு தெரிவாகியிருப்பது ஒரு பெரும் சாதனை என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உகண்டான பிரதம மந்திரிக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் அநாவசியமாக தலை யிடுவதன் மூலம் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் சமாதான மற்றும் நிவாரண முன்னெடுப்புகளுக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளிடையே இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டுவ தற்காக கம்பாலா சென்றுள்ள பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டவ ரின் தலையீடு இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டின் சமாதான செயற் பாடுகளுக்கு பெரும் தீங்கிழைப்பதாக கூறினார்.
உகண்டா அரச தலைவர் களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதே இந்தக் கரு த்தை இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உகண் டாவின் உப தலைவர் எட்வட் சிக்காண்டி, பிரதம மந்திரி அமாமா எம்ப பாசி, வெளிவிவகார அமைச்சர் ஓரியன் ஒக்கெல்லோ ஆகியோரை அமைச்சர் பீரிஸ் சந்தித்து கருத்துக்களை பரிமாறினார்.
இலங்கை வாழ் சகல இன மக்களும் கடந்த திங்களன்று அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அவர்களுக்கும் தங்கள் பூரண ஆதரவை தெரிவிக்கும் ஆர்ப் பாட்டங்களை அமைதியான முறையில் நாடெங்கிலும் நடத்தினார்கள். மெல்கம் கருதினால் ரஞ்சித் ஆண்டகை உட்பட இலங்கையின் சகல பெளத்த, ஹிந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களும் அரசாங்கம் முன்னெ டுக்கும் சமாதான நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக ஆதரித்து வருவ தாகவும் அவர் கூறினார்.
கம்பாலாவில் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருக்கிறதென்றும் இதன் மூலம் உகண்டா அரசாங்கத்தின் பூரண ஆதரவு இலங்கைக்கு கிடைக்குமென்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித் தார்.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மையானதும், சட்டபூர்வமானதுமான நிலையை ஜெனீவா மாநாட்டில் எடுத்துரைப்பதற்காக சட்டமா அதிபரும் அவரது குழுவினரும் ஜெனீவா சென்றிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் காணாமல் போன வர்கள் என்று புகார் செய்யப்பட்டவர்களில் இப்போது பலர் கண்டு பிடிக் கப்பட்டிருப்பதாகவும், யுத்தத்தினால் இறந்தவர்களின் உண்மையான எண் ணிக்கை முன்பு மதிப்பீடு செய்ததைவிட மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளிவிபர அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இதிலிருந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதை நாம் உலக நாடுகளுக்கு சிறந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளோம்.