ஈரான் எண்ணெய்க்கு டொலருக்கு பதில் தங்கத்தை பெற அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் எண்ணெய்க்கு தடைவிதித்துள்ள நிலையில் ஈரான் வங்கி வெளிநாட்டிலிருந்து எண்ணெய்க்கு பதில் டொலரை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குவதனாலேயே அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பில் ஈரான் மத்திய வங்கி ஆளுநர் மஹ்மூத் பஹ்மானி கூறும்போது, எந்த முன்னறிவிப்பும் இன்றி ஈரான் எண்ணெய்க்கு பதில் தங்கத்தை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார். உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஈரான் ஏற்கனவே ஏனைய நாணயங்களிலும் எண்ணெய் கொள்வனவுக்கு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.