3/05/2012

| |

ஈரான் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி கட்சிக்கு பின்னடைவு

ஈரான் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹ்மூத் அகமத் நிஜாத் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தனது சொந்த ஊரிலேயே ஜனாதிபதி சகோதரி பர்வீன் அகமத் நிஜாத் தோல்வி யைத் தழுவியுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கில் உள்ள நகரத்தில் வெளியான முதல் கட்டத் தேர்தல் முடிவுகள் ஜனாதி பதி கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளதாக மெர் செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது.
ஜனாதிபதியின் சகோதரி பர்வீன், கர்ம்சார் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கன்சர்வேட்டிவ் உறுப்பினரிடம் தோல்வியடைந்தார். மேலும் கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களே அதிக இடங்களைப் பிடித்துள்ளனர்.
முடிவுகள் வெளியான 60 இடங்களில் 46 இடங்கள் கன்சர் வேட்டிவ் கட்சியினரே வெற்றிய டைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் வாரத்தின் இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. புதிய பாராளுமன்றக் கூட்டம் வரும் ஜுன் மாதம் தொடங்க உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் த மஹ்மூத் அகமத் நிஜாத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.