3/01/2012

| |

கடற் தொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனியார் திருவிழா கச்சத்தீவில்

கடற் தொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனியார் திருவிழா கச்சத்தீவில்

இவ்வார இறுதியில் நடைபெறும்
ச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் மாதம் 3ம், 4ம் திகதிகளில் கச்சத் தீவில் கோலாகலமாக நடைபெற வுள்ளது. இலங்கை கடற்படையினர் இங்கிருந்து இலங்கை ஊடகவிய லாளர்களை இந்தத் திருவிழா நிகழ்ச்சியை கண்டுகளித்து, செய்திகளை எழுதுவதற்காக அழைத்துச் செல்ல வுள்ளார்கள். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கீழ் நிர்வ கிக்கப்படுகின்றது. பண்டிகை காலத்தில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கத்தோலிக்க குருமார் அங்கு சென்று ஆராதனைகளை நடத்துவார்கள்.
இந்தத் தடவை அந்தோனியார் திருவிழாவில் இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் 5000இற்கும் அதிகமானோர் வருவதாக எதிர் பார்க்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இலங்கை கடற் படையினர் குடிநீர் மற்றும் உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கச்சத்தீவுக்கு வரும் இந்தியர்களுக்கு அந்தோனியார் திருவிழாவுக்கு வருவதற்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் தடை தொடர்ந்திருக்கும். பொதுவாக ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் கச்சத்தீவிலுள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு வரும் இலங்கை மற்றும் இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் கடற்றொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாத யுத்தம் காரணமாக வருடா வருடம் மார்ச் மாதத்தில் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோனியார் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டின் மீண்டும் அமைதியும், சகஜநிலையும் ஏற் பட்டதையடுத்து கச்சத்தீவு அந் தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகின்றது.
பதில் வெகுஜன ஊடக, தகவல் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த திருவிழா நிகழ்ச்சிகளை எமது நாட்டின் அர சாங்க தொலைக்காட்சி சேவைகள் அங்கு சென்று ஒலி, ஒளிப் பதிவுகளை செய்து எமது தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்ப வேண்டு மென்று நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1972ம் ஆண்டில் நான் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிக் கொண் டிருந்த போது எனக்கு கச்சத்தீவுக்கு சென்று புனித அந்தோனியார் தேவாலயத்தின் பூஜைகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பொன்று கிடைத்தது. இலங்கையில் இருந்த பத்திரிகையாளர்களையும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒரு ஒலிபரப்பாளரையும் மாத்திரம் அன்று இலங்கை கடற்படையினர் கச்சத்தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
அது எங்களுக்கு ஒரு நல்ல அனு பவமாக இருந்தது. 1972ம் ஆண்டில் இலங்கையில் செத்தல் மிளகாய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அன்றைய அரசாங்கம் செத்தல் மிளகாயை இறக்குமதி செய்வதை தடை செய்திருந்ததே இதற்கான காரணமாகும். பொதுவாக 4 ரூபா வுக்கு ஒரு இறாத்தல் (500கிராம்) செத்தல் மிளகாய் விற்கப்படும். என்றாலும் செத்தல் மிளகாய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் அதன் விலை இறாத்தலுக்கு 50 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரித்தது.
அப்போது சாதாரணமாக ஒரு அரசாங்க ஊழியரின் சம்பளம் 300 ரூபா அளவிலேயே இருந்தது. அதனால், சாதாரண மக்களுக்கு செத்தல் மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு பணம் இருக்கவில்லை. இதனால் செத்தல் மிளகாய்கு பதிலாக மிளகையே பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தினார்கள்.
கச்சத்தீவுக்கு சென்றிருந்த நானும் எனது சகாக்களும் அங்கு செத்தல் மிளகாய் இறாத்தல் ஒன்று 2 ரூபாவிற்கு விற்கப்படுவதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தோம். நான் 10 இறாத்தல் செத்தல் மிளகாயை வாங்கினேன். இந்த செத்தல் மிளகாயை இந்தியாவில் இருந்து கச்சத்தீவிற்கு வந்திருந்த வியாபாரிகளே எங்களுக்கு விற்றார்கள். அதனை கொழும்புக்கு கொண்டு வந்து வீரகேசரியில் உள்ள நண்பர்களுக்கும் எனது அயலவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தேன். 1972ம் ஆண்டு கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த போதிலும், கச்சத்தீவில் இலங்கை மீனவர்களும் இந்திய மீனவர்களும் ஒற்றுமையாக களைப்பாறி செல்வதற்கு பூரண சுதந்திரம் இருந்தது.
தாங்கள் பிடித்துவரும் மீனை கச்சத்தீவில் வைத்து சமைத்து, சாப்பிட்ட பின்னர் புனித அந்தோ னியார் தேவாலயத்தில் வணங்கி விட்டு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். சமீப காலமாக இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்தும் சில பிரச்சினைகள் தோன்றினாலும் 1974ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கச்சத்தீவில் வந்து தங்கியிருந்து செல்வதற்கு இந்த ஒப்பந்தத்தில் பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
மக்கள் குடியிருப்பற்ற கச்சத்தீவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆழ்கடலில் அமைந் துள்ளது. இதன் நிலப்பரப்பு 285 ஏக்கராகும். கச்சத்தீவில் அந்தோனி யார் தேவாலயம் என்ற ஒரே ஒரு கட்டிடமே இருக்கின்றது. கடற்கரையில் காணப்படும் புதர்களே கச்சத்தீவு எங்கும் காணக்கூடியதாக இருக்கும்.
1974ம் ஆண்டுவரையில் கச்சத்தீவில் இலங்கைக்கு மிக அருகில் இருந் தாலும் அது இந்தியாவிற்கே சொந் தமாக இருந்தது. 1974ம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தியும் இலங்கை பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் செய்து கொண்ட நட்புறவு ஒப்பந் தத்தின் கீழ் இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு சொந்தமாக வழங்கியது.
கச்சத்தீவு வெறும் முருகைக் கற்களையும், புதர்களையும் கொண்ட ஒரு சிறிய தீவாகும். அங்குள்ள ஒரே ஒரு கட்டடம் பரிசுத்த அந்தோ னியாரின் மிகவும் சிறிய தேவா லயமாகும். இப்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதனாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து மீன் பிடிப்பதாலும் கச்சத்தீவுக்கு செல்வதற்கு இந்திய மீனவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் இருந்தாலும் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தென் இந்தியாவின் தமிழ்நாடு மாநில அரசியல்வாதிகள் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றாலும் அதனை மீண்டும் இந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகின்ற போதிலும் இந்தியாவின் மத்திய அரசாங்கம் இவர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.