3/27/2012

| |

தங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை மறைக்கும் அமெரிக்காவுக்கு இலங்கையை தண்டிப்பதற்கு அருகதை இல்லை

இந்நாட்டு மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வரும் புனிதப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா வீராவேசத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கண்டனப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி இருக்கின்ற போதிலும் அமெரிக்கா அதைவிட படுமோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுவதற்காக நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். 1968ல் தென் வியட்னாமில் சுமார் 500 அப்பாவி மைலாய் கிராமத்து மக்களை படுகொலை செய்த அமெரிக்க படையின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் வில்லியம் கெலி. 1968ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதியன்று வியட்னாமில் உள்ள அமெரிக்க படைகளின் 23வது அணியைச் சேர்ந்த சாலி கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு படையணி தென் வியட்னாமின் மை லாய் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்திற்குள் புகுந்து அங்கு மறைந்திருப்பதாக கூறப்படும் வியட்கொங் கெரில்லா போராளிகளை துவம்சம் செய்யும் பணியை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு அந்த கிராமத்திற்குள் புகுந்த அமெரிக்கப்படையினர் பல மணித்தியாலங்களுக்கு பின்னர் அக்கிராமத்தில் இருந்து திரும்பும் போது கிராமத்து மக்களில் 300ற்கும் 500ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கை யினர் கொல்லப்பட்டனர். இவர்கள் துப்பாக்கி முனையினால் குத்திக் குதறியும் மிக அருகில் இருந்து துப்பாக்கி யினால் சுடப்பட்டும் படுகொலை செய்யப் பட்டனர். தங்களுக்கு ஆபத்து வருகிறதென்று பயந்து சிலர் முழங்கா லிட்டு, பிரார்த்தித்துக் கொண்டிருந்த போதும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை குறித்து 1969ம் ஆண்டில் அமெரிக்க இராணுவ விசாரணை நடைபெற்றது. இந்த படையணிக்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் வில்லியம் கெலியின் ஆணைப்படியே நாம் இந்த கிராமத்தவர்களை படுகொலை செய்தோம் என்று இந்த அமெரிக்க படை அணியினர் விசாரணையின் போது தெரிவித்தனர். மைலாயில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு பிள்ளைகளும் பெண்களுமாகும். இறந்தவர்களில் ஒருவர் கூட வியட்கொங் கெரில்லா போராளிகள் அல்ல. இந்த சம்பவமே வியட்னாம் போரில் இருந்து அமெரிக்கா வெளியேறுவ தற்கு அடிதளமாக அமைந்தது. இந்த சம்பவம் 40 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அதே போன்று இன்னுமொரு சம்பவம் ஆப்கானிஸ் தானின் தெற்கு கந்தஹார் மாகாணத் தில் சமீபத்தில் இடம்பெற்றது. அங்கு 16பேர் சுட்டுக் கொல்லப்பட் டனர். அவர்களின் விரல்களும் வெட்டி துண்டிக்கப்பட்டன. இது போன்று ஆப்கானிஸ்தானில் இன்னுமொரு இடத்தில் அமெரிக்க இராணுவத்தினர் மனித நீதியையும் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் இராணுவ சட்டத்தை மறந்து போர் முனையில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த வெட்கக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றன. மைலாய் மனிதப் படுகொலைக்கு பொறுப்பாளர் என்று தண்டிக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தின் லெப்டினன்ட் வில்லியம் கெலி மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்து அமெரிக்க மக்கள் அந்தளவிற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அன்று அமெரிக்காவில் உள்ள ஐவரில் நான்கு பேர் இந்த கொலையாளியை விடுவிக்க வேண்டுமென்ற கருத்தை கொண்டிருந்தனர். மைலாய் படுகொலையில் உயிர்தப்பிய சிறுமி உடைகளின்றி தப்பியோடி வரும் காட்சி. இப்போது 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அமெரிக்க படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிர்தப்பிய சிறு குழந்தைகள் அளித்த வாக்கு மூலத்தில் தங்கள் மீது அமெரிக்க படையினர் கைக்குண்டுகளையும் எரிந்ததாக கூறினர். பொதுவாக ஒரு யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெறுவதுண்டு. மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் இராணுவத்தினர் புரியும் குற்றச் செயல்களை விசாரணை செய்து, அவர்களை சட்டபூர்வமான முறையில் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் அமெரிக்க அரசாங்கம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் நாட்டவர்களை காப்பாற்றுவதற்கான இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுவது இந்த விசாரணைகளின் மூலம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. மைலாய் விசாரணையிலும் இறுதியில் நடந்தது இதுதான். இந்த குற்ற மனிதப் படுகொலைக்கு பொறுப்பான இராணுவ லெப்டினன்ட் வில்லியம் கெலிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறைத்தண்டனை 10 ஆண்டாக குறைக்கப்பட்டது. இறுதியில் மூன்றரை வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் லெப்டினன்ட் வில்லியம் கெலி விடுவிக்கப்பட்டார். இதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் மனித நேயம். அது போன்று ஈராக்கில் அபு ஹிரைப் சிறைச்சாலையில் அப்பாவி கைதிகளை துன்புறுத்திய சார்ஜன் பேல்ஸ் அவ்விதமே ஆகக்குறைந்த தண்டனையுடன் தப்பிவிட்டார். இவர்களில் சிலருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர்களும் ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது போன்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அமெரிக்க இராணுவத்தினரின் குற்றங்கள் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டும் இருக்கின்றன. இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விமானி ஜெனரல் டக்ளஸ் மெகாத, பலவீனமான நிராயுதபாணிகளான மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதில் அவர்களை கொலை செய்வது கண்டிக்கத்தக்கது என்றார். நிவ்ஸ் வீக் சஞ்சிகையின் விசேட கட்டுரையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் தங்கள் இராணுவத்தினர் செய்யும் யுத்த அத்துமீறல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்களை மறைக்கும் அமெரிக்க, இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துன்புறுத்துவது நியாயம்தானா?