3/26/2012
| |
முறக்கொட்டான்சேனை சந்தை பொதுமக்கள் பாவனைக்காக கிழக்கு முதல்வரினால் கையளிப்பு.
முறக்கொட்டான்சேனை சந்தை அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (25.03.201) பிரதேசசபை தவிசாளர் எஸ்.உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சந்தையினை திறந்து வைத்து பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப+.பிரசாந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான ஆ.சிவநேசதுரை, நடராசலிங்கம், நடராசா மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.