கிழக்கு பல்கலைக்கழத்தின் புதிய உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா இன்று(05.03.2012) திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் புதிய உப வேந்தருக்கு மகத்தான் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரெட்ண உயர் கல்வி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி நிமால் குணதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இதனால் கலாநிதி பிரேம்குமார் பதில் உப வேந்தராக கடமையாற்றி வந்தார்.
குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவகணேசன் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன் மற்றும் கனடாவில் வசித்த கலாநிதி கிட்ணன்
கோபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
கோபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் ஏழாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் உப வேந்தராக நியமனம் பெற்றுள்ள முதலாவது நபர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஸா என்பதுடன் 1989ஆம்ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவனாக நுழைந்த இவர் கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய இவர் கனடா பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.