3/07/2012

| |

விடுதலைப் புலிகளினால் இலக்குவைக்கப்பட்டதன்காரணமாகவேவெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

dsc_0095.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல்களை ஒளித்துக்கட்டுவேன்என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்துள்ளார் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எவ்விதமான ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாதவாறு நிதிஇ நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதே எனது இலக்கு
கடந்த 7 வருடங்களாக கனடாவிலுள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றதையடுத்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று பல்கலைக்கழகத்தில் தனது பொறுப்புக்களை ஏற்ற பின்னர் இடம்பெற்ற பத்தரிகையாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட புதிய உபவேந்தர்
கிழக்கப் பல்கலைக் கழகத்தில் கடந்த காலங்களில் நிதி நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பலராலும் கூறப்படுவது உண்மை. ஆனால் எதிர்காலத்தில் அவை இடம்பெறாதாவாறு தனது பணி முன்னெடுக்கப்படும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக கல்வி கற்ற காலத்திலிருந்தே இப்படியான முறைகேடுகள் இடம்பெற்றுவருகின்றன. பல்கலைக் கழகங்களில் ஊழல் மற்றும் முறைகேடு என்பது எல்லா பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுகிறது.
2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் விடுதலைப் புலிகளினால் இலக்குவைக்கப்பட்டதன் காரணமாகவே பல கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியான நெருக்கடி நிலை காரணமாக அப்போது நாட்டைவிட்டு நானும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இப்படியான நிலை இடம்பெறமாட்டாது என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே நான் தற்போது நாடு திரும்பி இந்த பதவியை பொறுப்பபேற்றுள்ளேன் என்று கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.