3/06/2012

| |

நான்கு ஆண்டுகளின் பின்னர் ர~;ய ஜனாதிபதியாக மீண்டும் புடின்

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியீட்டி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் புடின் 63 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நேர்மையான போட்டியின் மூலம் தாம் வெற்றியீட்டியதாக மொஸ்கோவில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் புடின் குறிப்பிட்டார்.
எனினும் தேர்தலில் முறைகேடு இடம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்த்தரப்பினர் அதற்கு எதிராக மொஸ்கோ நகரில் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அறிவித்துள் ளனர்.
இதில் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுவான காலொஸ், ஜனாதிபதி தேர்தலில் 50 வீதத்திற்கு சற்று அதிக வாக்குகளையே புடின் பெற்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி அதிக பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை எனவும் கூறியுள்ளது. ஒரு வாக்களாரே பல வாக்குகளை இட்டதாக முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளது எனவும் காலொஸ் கூறியுள்ளது.
இதனிடையே புடினின் வெற்றியைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆயி ரக்கணக்கானோர் ரஷ்ய கொடிகள் மற் றும் பதாகைகளை ஏந்தியவாறு கிரம்லினுக்கு வெளியே கூடி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற புடின் தமது ஆதரவாளர் மத்தியில் பேசுகையில், தமது வெற்றி நேர்மையானது. இந்த வெற்றி ரஷ்யாவுக்கு பெருமை. எம்மீது எவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது என்றார். இவ்வாறு பேசும் போது அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
இந்நேரம், ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர். ‘புடின் எங்கள் ஜனாதிபதி’, ‘எங்களின் நம்பிக்கைக்குரியவர்’ என்ற வாசகம் கொண்ட பதாகைகள் ஏந்தி வந்தனர். வீதிகளில் பட்டாசு வெடித்து வண்ண விளக்குகள் போட்டு கொண்டாடினர்.
இந்தத் தேர்தலையொட்டி ரஷ்ய தலைநகரில் பாதுகாப்புக் கடமைகளுக்காக 6000 மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய சட்டத்தின்படி ஒருவர் இரு முறைக்கு மேல் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இரு முறை தொடர்ச்சியாக ஜனாதிபதியாக இருந்த புடினால் தொடர்ந்து மூன்றாவது முறையும் போட்டியிட முடியாமல் போனது.
இந்நிலையில் புடினின் ஆதரவு பெற்ற டிமிட்ரி மெத்வருதல் 2008 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்ய ஜனாதிபதியாக தேர்வானமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி தற்போது மீண்டும் ஜனாதி பதியாக தெரிவாகியுள்ள (59 வயதான) விளாடிமிர் புடின் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு வெற்றியீட்டும் பட்சத்தில் 2018 வரை ஜனாதிபதியாக இருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட முடிவுகளின்படி எண்ணப்பட்டுள்ள 99 வீத வாக்குகளில் 63.75 வீதமான வாக்கு களை பெற்று புடின் வெற்றியீட்டி யுள்ளார். இதனால் தேர்தல் இரண்டாவது சுற்றுச் செல்ல வேண்டி ஏற்படவில்லை. புடினை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளரான கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னடி சுகனொவ் 17.19 வீத வாக்குகளை வென்றார். ஏனைய மூன்று வேட்பாளர்களும் ஒற்றை இலக்கம் வீதத்திலேயே வாக்குகளை பெற்றனர்.
எனினும் இந்தத் தேர்தல் நீதி, நியாயம் அற்றது என எதிர்க் கட்சி வேட்பாளர் சுகனொவ் குற்றம் சாட்டியுள்ளார். புடின் நினைத்தது போன்று ரஷ்யாவில் ஆட்சி செய்ய முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலுக்காக 90 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவை கண்காணிக்க ஒரு இலட்சம் வெப்கெமராக்கள் பொருத்தப்பட்டி ருந்தன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 பார்வையாளர்கள் தேர்தலை கண் காணித்தனர்.